கல்லுண்டாயில் வெள்ளநீர் உட்புகுந்த வீட்டிற்கு அரசினால் வழங்கப்படும் 25,000.00 ரூபா நிவாரணம் வழங்கப்படாமை தொடர்பான முறைப்பாட்டுக்கு சண்டிலிப்பாய் பிரதேச செயலாளரால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதனை யாழ்ப்பாணம் பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழுவிவின் இணைப்பாளர் த.கனகராஜ் இன்று தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
அந்த அறிக்கையில், முறைப்பாட்டாளர் உட்பட்ட 18 வீடுகளுக்கான சேதவிபரம் சிபாரிசு செய்யப்பட்டு அரச அதிபருக்கு நிதி ஒதுக்கீட்டுக்காக அனுப்பப்பட்டுள்ளது.
முறைப்பாட்டாளரோ அல்லது அவரது பிரதிநிதியோ நேரில் சமூகமளிக்கும்போது வெள்ளநிவாரணம் தொடர்பான சுற்றுநிருபங்கள் மற்றும் நிதிப்பிரமணம் என்பவற்றின்படி முறைப்பாட்டாளருக்கான கொடுப்பனவை வழங்கமுடியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முறைப்பாட்டாளர் தொலைபேசிமூலம் தொடர்புகொண்டபோது நேரில் வந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு கொடுப்பனவை பெற்றுக்கொள்ளும்படி பிரதேச செயலாளரால் முறைப்பாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
கல்லுண்டாயில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டும் வெள்ள நிவாரணம் வழங்கப்படவில்லை என்று அப்பகுதியை சேர்ந்த மாணவன் ஒருவன் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் கிராம சேவையாளர் ஒருவருக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்தில் நேற்று முறைப்பாடு பதிவு செய்திருந்தார்.
இந்த நிலையிலேயே இன்று கல்லுண்டாய் பகுதியிலுள்ள 18 குடும்பங்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
கல்லூண்டாயில் நிவாரணம் வழங்க மறுத்த கிராம சேவகர்; மாணவன் எடுத்த முயற்சியால் 18 குடும்பங்களுக்கு நிவாரணம் கல்லுண்டாயில் வெள்ளநீர் உட்புகுந்த வீட்டிற்கு அரசினால் வழங்கப்படும் 25,000.00 ரூபா நிவாரணம் வழங்கப்படாமை தொடர்பான முறைப்பாட்டுக்கு சண்டிலிப்பாய் பிரதேச செயலாளரால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.இதனை யாழ்ப்பாணம் பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழுவிவின் இணைப்பாளர் த.கனகராஜ் இன்று தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,அந்த அறிக்கையில், முறைப்பாட்டாளர் உட்பட்ட 18 வீடுகளுக்கான சேதவிபரம் சிபாரிசு செய்யப்பட்டு அரச அதிபருக்கு நிதி ஒதுக்கீட்டுக்காக அனுப்பப்பட்டுள்ளது.முறைப்பாட்டாளரோ அல்லது அவரது பிரதிநிதியோ நேரில் சமூகமளிக்கும்போது வெள்ளநிவாரணம் தொடர்பான சுற்றுநிருபங்கள் மற்றும் நிதிப்பிரமணம் என்பவற்றின்படி முறைப்பாட்டாளருக்கான கொடுப்பனவை வழங்கமுடியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் முறைப்பாட்டாளர் தொலைபேசிமூலம் தொடர்புகொண்டபோது நேரில் வந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு கொடுப்பனவை பெற்றுக்கொள்ளும்படி பிரதேச செயலாளரால் முறைப்பாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.கல்லுண்டாயில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டும் வெள்ள நிவாரணம் வழங்கப்படவில்லை என்று அப்பகுதியை சேர்ந்த மாணவன் ஒருவன் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் கிராம சேவையாளர் ஒருவருக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்தில் நேற்று முறைப்பாடு பதிவு செய்திருந்தார். இந்த நிலையிலேயே இன்று கல்லுண்டாய் பகுதியிலுள்ள 18 குடும்பங்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.