• Apr 11 2026

KKS கடற்கரையில் மார்ச் 6,7,8இல் மாபெரும் இசை நிகழ்ச்சி

Chithra / Mar 5th 2026, 8:09 am
image

 


யாழ் மாவட்டத்தின் 12 இசைக் குழுக்கள் இணைந்து மாபெரும் இசை நிகழ்ச்சியை காங்கேசன்துறை கடற்கரை பகுதியில் அமைந்துள்ள வலிகாமம் வடக்கு பிரதேச சபை மைதானத்தில் மார்ச் 6,7,8ம் திகதிகளில் மதியம் ஒரு மணி முதல் நடத்த ஏற்பாடு செய்துள்ளன.

இது தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு நிகழ்வு ஏற்பாட்டாளர்களான யாழ் மாவட்ட இசைக் குழு கலைஞர்கள் சங்க பிரதிநிதிகளால் யாழ் ஊடக அமையத்தில் நடத்தப்பட்டது.

தாயக இசைக் கலைஞர்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் நிதி திரட்டும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள குறித்த நிகழ்விற்கு பலரும் தமது நிதி அனுசரணையை வழங்கியுள்ளனர்.

இசை நிகழ்ச்சி, உணவுத் திருவிழா, களியாட்ட நிகழ்ச்சி என பல விடயங்கள் இதன்போது நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

அனுமதி கட்டணமாக சிறுவர்களுக்கு நூறு ரூபாவும் பெரியவர்களுக்கு இருநூறு ரூபாவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

KKS கடற்கரையில் மார்ச் 6,7,8இல் மாபெரும் இசை நிகழ்ச்சி  யாழ் மாவட்டத்தின் 12 இசைக் குழுக்கள் இணைந்து மாபெரும் இசை நிகழ்ச்சியை காங்கேசன்துறை கடற்கரை பகுதியில் அமைந்துள்ள வலிகாமம் வடக்கு பிரதேச சபை மைதானத்தில் மார்ச் 6,7,8ம் திகதிகளில் மதியம் ஒரு மணி முதல் நடத்த ஏற்பாடு செய்துள்ளன.இது தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு நிகழ்வு ஏற்பாட்டாளர்களான யாழ் மாவட்ட இசைக் குழு கலைஞர்கள் சங்க பிரதிநிதிகளால் யாழ் ஊடக அமையத்தில் நடத்தப்பட்டது.தாயக இசைக் கலைஞர்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் நிதி திரட்டும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள குறித்த நிகழ்விற்கு பலரும் தமது நிதி அனுசரணையை வழங்கியுள்ளனர்.இசை நிகழ்ச்சி, உணவுத் திருவிழா, களியாட்ட நிகழ்ச்சி என பல விடயங்கள் இதன்போது நடைபெற ஏற்பாடாகியுள்ளது.அனுமதி கட்டணமாக சிறுவர்களுக்கு நூறு ரூபாவும் பெரியவர்களுக்கு இருநூறு ரூபாவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement