தற்போது பெரும் போக நெற் செய்கை அறுவடை இடம் பெற்று வரும் நிலையில் இம் முறை விளைச்சல் குறைவு எனவும் கிண்ணியா குறிஞ்சாக்கேணி கமநல சேவைகள் பிரிவுக்குட்பட்ட விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
குறித்த விடயம் தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
கனமழை மற்றும் கந்தளாய் குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டதால் வேளாண்மை செய்கை நீரில் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். இயந்திரம் மூலமான அறுவடையின் போது ஒரு ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபா செலவாகிறது ஒரு ஏக்கருக்கு 10 மூடைக்கும் குறைவாகவே கிடைப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
தரமற்ற கிருமி நாசினி, நோய் தாக்கம் காரணமாக விளைச்சலில் குறைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.இப் பகுதியில் 400ஏக்கருக்கும் அதிகமாக செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசாங்கம் நஷ்ட ஈடுகளை வழங்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
பெரும் போக நெற் செய்கை ஆரம்பம் - விளைச்சலில் வீழ்ச்சி.samugammedia தற்போது பெரும் போக நெற் செய்கை அறுவடை இடம் பெற்று வரும் நிலையில் இம் முறை விளைச்சல் குறைவு எனவும் கிண்ணியா குறிஞ்சாக்கேணி கமநல சேவைகள் பிரிவுக்குட்பட்ட விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.குறித்த விடயம் தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில், கனமழை மற்றும் கந்தளாய் குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டதால் வேளாண்மை செய்கை நீரில் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். இயந்திரம் மூலமான அறுவடையின் போது ஒரு ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபா செலவாகிறது ஒரு ஏக்கருக்கு 10 மூடைக்கும் குறைவாகவே கிடைப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.தரமற்ற கிருமி நாசினி, நோய் தாக்கம் காரணமாக விளைச்சலில் குறைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.இப் பகுதியில் 400ஏக்கருக்கும் அதிகமாக செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசாங்கம் நஷ்ட ஈடுகளை வழங்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.