மகாவலி கங்கை பெருக்கெடுப்பால், திருகோணமலை கிண்ணியா பிரதேச செயலக பிரிவில் உள்ள நான்கு கிராமங்களின் தரைவழி பாதை துண்டிக்கப்பட்டுள்ளது.
கிண்ணியா பிரதேசத்தில் உள்ள, உப்பாறு கிராம சேவகர் பிரிவிலுள்ள கண்டல்காடு, மயிலப்பன்சேனை, காரை வெட்டுவான் மற்றும் சோலை வெட்டுவான் ஆகிய கிராமங்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளன.
கிண்ணியா நகரத்துக்கு செல்வதற்கு வேறு எந்த தரை வழி போக்குவரத்து மார்க்கமும் இன்றி, வெள்ளத்துக்கு மத்தியில், தங்களுடைய வீடுகளில் இருந்தவாறு, குடும்பங்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
விவசாயத்தையும் மீன்பிடித் தொழிலையும் ஜீவனோபாய தொழிலாக கொண்ட, சுமார் 250 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த கிராமங்களில் வசித்து வருகின்றனர்.
தரைவழி போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளதால் அவர்களின் இயல்பு வாழ்க்கை
மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக இக் கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர்.
சிறு தோணிகள் மூலமே இவர்கள் பயணம் செய்து வருகின்றனர்.
இது ஒரு பாதுகாப்பான பயணம் இல்லை எனவும், பாதுகாப்பான போக்குவரத்து வசதிகளை பெற்றுத் தருமாறு அரச அதிகாரிகளிடம் இந்த கிராமவாசிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
வைத்தியசாலை போன்ற அவசர தேவைகளுக்குகூட உடனடியாக செல்ல முடியாது கஷ்டப்படுவதாகவும், உணவு தேவை போன்ற அன்றாட கருமங்களை தேவையான நேரங்களில் உடனடியாக நிறைவேற்ற முடியாமல் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு வெள்ள அனர்த்த நிலைமைகளின் போது, 14 வருடங்களுக்கு மேலாக இதே கஷ்டங்களை தொடர்ச்சியாக எதிர்நோக்கி வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
கிண்ணியாவில் நான்கு கிராமங்களின் தரைவழி போக்குவரத்து துண்டிப்பு சுமார் 250 குடும்பங்கள் நிர்க்கதி மகாவலி கங்கை பெருக்கெடுப்பால், திருகோணமலை கிண்ணியா பிரதேச செயலக பிரிவில் உள்ள நான்கு கிராமங்களின் தரைவழி பாதை துண்டிக்கப்பட்டுள்ளது. கிண்ணியா பிரதேசத்தில் உள்ள, உப்பாறு கிராம சேவகர் பிரிவிலுள்ள கண்டல்காடு, மயிலப்பன்சேனை, காரை வெட்டுவான் மற்றும் சோலை வெட்டுவான் ஆகிய கிராமங்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளன.கிண்ணியா நகரத்துக்கு செல்வதற்கு வேறு எந்த தரை வழி போக்குவரத்து மார்க்கமும் இன்றி, வெள்ளத்துக்கு மத்தியில், தங்களுடைய வீடுகளில் இருந்தவாறு, குடும்பங்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். விவசாயத்தையும் மீன்பிடித் தொழிலையும் ஜீவனோபாய தொழிலாக கொண்ட, சுமார் 250 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த கிராமங்களில் வசித்து வருகின்றனர். தரைவழி போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளதால் அவர்களின் இயல்பு வாழ்க்கை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக இக் கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர்.சிறு தோணிகள் மூலமே இவர்கள் பயணம் செய்து வருகின்றனர். இது ஒரு பாதுகாப்பான பயணம் இல்லை எனவும், பாதுகாப்பான போக்குவரத்து வசதிகளை பெற்றுத் தருமாறு அரச அதிகாரிகளிடம் இந்த கிராமவாசிகள் கோரிக்கை விடுக்கின்றனர். வைத்தியசாலை போன்ற அவசர தேவைகளுக்குகூட உடனடியாக செல்ல முடியாது கஷ்டப்படுவதாகவும், உணவு தேவை போன்ற அன்றாட கருமங்களை தேவையான நேரங்களில் உடனடியாக நிறைவேற்ற முடியாமல் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.இவ்வாறு வெள்ள அனர்த்த நிலைமைகளின் போது, 14 வருடங்களுக்கு மேலாக இதே கஷ்டங்களை தொடர்ச்சியாக எதிர்நோக்கி வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.