• Jan 17 2025

நெல்லுக்கான உத்தரவாத விலை மற்றும் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை - அடுத்த வாரம் வரவுள்ள வர்த்தமானி

Chithra / Jan 16th 2025, 8:38 am
image

 

நெல்லுக்கான உத்தரவாத விலையை அரசாங்கம் உடனடியாக அறிவிக்க வேண்டும் என சிறு மற்றும் நடுத்தர அளவிலான நெல் ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் யூ.கே.சேமசிங்க  கோரிக்கை விடுத்துள்ளார். 

கால்நடை தீவனத்திற்காகப் பச்சை அரிசியைப் பயன்படுத்தியமையே அதன் தட்டுப்பாட்டுக்கு முக்கிய காரணம் என அவர் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் உரிய கண்காணிப்புக்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். பச்சை அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்திக்க அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

எனவே  அரசாங்கம் அடுத்த போகத்திற்கு முன்னர் நெல்லுக்கான உத்தரவாத விலை அறிவிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். 


இந்நிலையில் நெல்லுக்கான உத்தரவாத விலை மற்றும் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை தொடர்பிலான வர்த்தமானி எதிர்வரும் வாரம் பிரசுரிக்கப்படும் என வர்த்தகம், வாணிபம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சந்தையில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டுக்குத் தீர்வு காண்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டுபவர்கள், அரிசி தட்டுப்பாட்டுக்கான காரணிகளைக் குறிப்பிடுவதில்லை. 

வருடாந்தம் 40 இலட்சம் மெற்றிக் தொன் நெல் உற்பத்தி செய்யப்படுகின்ற நிலையில் அவற்றில் 10 ஆயிரம் மெற்றிக் தொன் அளவிலான நெல்லே அரசாங்கத்தால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

2023 மற்றும் 2024 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அரசாங்கம் விவசாயிகளிடமிருந்து சுமார் 5000 மெற்றிக்தொன் அரிசியே கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. 

அத்துடன் நெல்லை கொள்வனவு செய்து அவற்றை களஞ்சியப்படுத்தி வைக்கும் வசதி அரசாங்கத்திடம் இருக்கவில்லை.

இவ்வாறான காரணிகளால் தான் தற்போது அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 

அரசுக்கு சொந்தமான நெற்களஞ்சியசாலைகளை புனரமைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.

இம்முறை பெரும்போக அறுவடையின் போது விவசாயிகளிடமிருந்து  3 இலட்சம் மெற்றிக் தொன் வரையிலான நெல்லை கொள்வனவு செய்வோம்.

நெல்லுக்கான உத்தரவாத விலை மற்றும் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை தொடர்பிலான வர்த்தமானி எதிர்வரும் வாரம் பிரசுரிக்கப்படும்.

விவசாயிகளையும், நுகர்வோரையும் பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

பிரதான அரிசி உற்பத்தியாளர்களிடம் அரசாங்கம் அடிபணிந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குறிப்பிடுவது முற்றிலும் பொய்யானது என அவர் தெரிவித்தார்.

நெல்லுக்கான உத்தரவாத விலை மற்றும் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை - அடுத்த வாரம் வரவுள்ள வர்த்தமானி  நெல்லுக்கான உத்தரவாத விலையை அரசாங்கம் உடனடியாக அறிவிக்க வேண்டும் என சிறு மற்றும் நடுத்தர அளவிலான நெல் ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் யூ.கே.சேமசிங்க  கோரிக்கை விடுத்துள்ளார். கால்நடை தீவனத்திற்காகப் பச்சை அரிசியைப் பயன்படுத்தியமையே அதன் தட்டுப்பாட்டுக்கு முக்கிய காரணம் என அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் உரிய கண்காணிப்புக்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். பச்சை அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்திக்க அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே  அரசாங்கம் அடுத்த போகத்திற்கு முன்னர் நெல்லுக்கான உத்தரவாத விலை அறிவிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் நெல்லுக்கான உத்தரவாத விலை மற்றும் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை தொடர்பிலான வர்த்தமானி எதிர்வரும் வாரம் பிரசுரிக்கப்படும் என வர்த்தகம், வாணிபம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.சந்தையில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டுக்குத் தீர்வு காண்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டுபவர்கள், அரிசி தட்டுப்பாட்டுக்கான காரணிகளைக் குறிப்பிடுவதில்லை. வருடாந்தம் 40 இலட்சம் மெற்றிக் தொன் நெல் உற்பத்தி செய்யப்படுகின்ற நிலையில் அவற்றில் 10 ஆயிரம் மெற்றிக் தொன் அளவிலான நெல்லே அரசாங்கத்தால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.2023 மற்றும் 2024 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அரசாங்கம் விவசாயிகளிடமிருந்து சுமார் 5000 மெற்றிக்தொன் அரிசியே கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் நெல்லை கொள்வனவு செய்து அவற்றை களஞ்சியப்படுத்தி வைக்கும் வசதி அரசாங்கத்திடம் இருக்கவில்லை.இவ்வாறான காரணிகளால் தான் தற்போது அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அரசுக்கு சொந்தமான நெற்களஞ்சியசாலைகளை புனரமைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.இம்முறை பெரும்போக அறுவடையின் போது விவசாயிகளிடமிருந்து  3 இலட்சம் மெற்றிக் தொன் வரையிலான நெல்லை கொள்வனவு செய்வோம்.நெல்லுக்கான உத்தரவாத விலை மற்றும் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை தொடர்பிலான வர்த்தமானி எதிர்வரும் வாரம் பிரசுரிக்கப்படும்.விவசாயிகளையும், நுகர்வோரையும் பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.பிரதான அரிசி உற்பத்தியாளர்களிடம் அரசாங்கம் அடிபணிந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குறிப்பிடுவது முற்றிலும் பொய்யானது என அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement