• Dec 27 2024

தம்பலகாமத்தில் மாற்றுத் திறனாளிகள் தின நிகழ்வு

Tharmini / Dec 24th 2024, 4:06 pm
image

சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினமாக டிசம்பர் 03ம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறுது.

தம்பலாமம் பிரதேச செயலகப் பகுதியில் மாற்றுத் திறனாளிகள் தினம் இன்று (24)இடம்பெற்றது.

குறித்த மாற்றுத் திறனாளிகள் தினத்தை தம்பலகமம் பிரதேச செயலகம் மற்றும் மருதம் மாற்றுத் திறனாளிகள் சங்கம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். 

தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி அவர்களின் வழிகாட்டுதளுக்கிணங்க குறித்த நிகழ்வானது தம்பலகமம் தி/இ.சாரதா தமிழ் வித்தியாலயத்தில் இடம்பெற்றது. 

இம்முறை மாற்றுத் திறனாளிக் தொனிப்பொருளாக " உள்ளடங்கிய மற்றும் நிலையான எதிர்காலத்திற்காக மாற்றுத் திறனாளிகளின் தலைமைத்துவத்தை மேம்படுத்தல் "  எனும் தொனிப்பொருளின் கீழ் கொண்டாடப்பட்டது.

இதன் போது குறித்த பாடசாலையில் விசேட கல்வி பிரிவில் கற்கும் மாணவ மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகளும் இடம் பெற்றதுடன் மருதம் மாற்றுத்  திறனாளிகளின் சங்க உறுப்பினர்களின் கலை கலாசார நிகழ்வுகளும் இடம் பெற்றன.

இதில் பரிசளிப்பு வைபவமும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நிகழ்வுக்கு தம்பலகாமம் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், சமுர்த்தி தலைமை முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சித்திக், மாவட்ட  செயலக சமூக சேவைகள் திணைக்கள இணைப்பாளர் த.பிரணவன் , திருகோணமலை வலயக் கல்வி அலுவலக விசேட கல்வி பிரிவு உதவி கல்வி பணிப்பாளர் அகிலன், தம்பலகாமம் கோட்ட கல்வி பணிப்பாளர், கப்பல்துறை ஆயுர்வேத தளவைத்தியசாலை வைத்தியர் மல்சா ஜயரட்ண உட்பட சமூக சேவைகள் உத்தியோகத்தர், சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர், சாரதா வித்தியாலய பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மருதம் மாற்றுத் திறனாளிகள் சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.




தம்பலகாமத்தில் மாற்றுத் திறனாளிகள் தின நிகழ்வு சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினமாக டிசம்பர் 03ம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறுது.தம்பலாமம் பிரதேச செயலகப் பகுதியில் மாற்றுத் திறனாளிகள் தினம் இன்று (24)இடம்பெற்றது.குறித்த மாற்றுத் திறனாளிகள் தினத்தை தம்பலகமம் பிரதேச செயலகம் மற்றும் மருதம் மாற்றுத் திறனாளிகள் சங்கம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி அவர்களின் வழிகாட்டுதளுக்கிணங்க குறித்த நிகழ்வானது தம்பலகமம் தி/இ.சாரதா தமிழ் வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இம்முறை மாற்றுத் திறனாளிக் தொனிப்பொருளாக " உள்ளடங்கிய மற்றும் நிலையான எதிர்காலத்திற்காக மாற்றுத் திறனாளிகளின் தலைமைத்துவத்தை மேம்படுத்தல் "  எனும் தொனிப்பொருளின் கீழ் கொண்டாடப்பட்டது.இதன் போது குறித்த பாடசாலையில் விசேட கல்வி பிரிவில் கற்கும் மாணவ மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகளும் இடம் பெற்றதுடன் மருதம் மாற்றுத்  திறனாளிகளின் சங்க உறுப்பினர்களின் கலை கலாசார நிகழ்வுகளும் இடம் பெற்றன. இதில் பரிசளிப்பு வைபவமும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.குறித்த நிகழ்வுக்கு தம்பலகாமம் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், சமுர்த்தி தலைமை முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சித்திக், மாவட்ட  செயலக சமூக சேவைகள் திணைக்கள இணைப்பாளர் த.பிரணவன் , திருகோணமலை வலயக் கல்வி அலுவலக விசேட கல்வி பிரிவு உதவி கல்வி பணிப்பாளர் அகிலன், தம்பலகாமம் கோட்ட கல்வி பணிப்பாளர், கப்பல்துறை ஆயுர்வேத தளவைத்தியசாலை வைத்தியர் மல்சா ஜயரட்ண உட்பட சமூக சேவைகள் உத்தியோகத்தர், சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர், சாரதா வித்தியாலய பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மருதம் மாற்றுத் திறனாளிகள் சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement