நாடளாவிய ரீதியில் நடைபெறும் கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்திற்கு அமைய வவுனியா செட்டிகுளம் மகா வித்தியாலயத்தின் கல்லூரியின் முதல்வர் ச.தயாகரன் தலைமையில் நிகழ்வு ஆரம்பமானது.
நிகழ்வில் வவுனியா தெற்கு வலயக்கல்வி அலுவகத்தின் பிரதி நிதியாக திட்டமிடல் பிரதி கல்வி பணிப்பாளர் ஜெனால்ட் அன்ரனி மற்றும் கோட்ட கல்வி பணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
பாடசாலை மாணவர்களின் சிரமதானமும், சூழலைப்பாதுகாப்போம் மற்றும் நாட்டை வளர்ப்போம் எனும் தலைப்பில் வீதி நாடகமும் இடம்பெற்றது.
அத்துடன் மாணவர்களுக்கு சுகாதாரப் பழக்கவழக்கங்களும், உணவுப்பாதுகாப்பும் எனும் தலைப்பில் பிரதேச சுகாதாரப் பரிசோதகரினால் செயலமர்வு இடம்பெற்றதுடன் இலைக்கஞ்சியும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் மாணவர்களுக்கான தலைமைத்துவ செயலமர்வும் இடம்பெற்றது.
இச் செயற்றிட்டம் செட்டிகுளம் பிரதேச சபை, செட்டிகுளம் பிரதேச செயலகம், செட்டிகுளம் பிராந்திய சுகாதார வைத்திய பணிமனை, செட்டிகுளம் பொலிஸ், இராணுவத்தினர், பெற்றோர், பழைய மாணவர் போன்றோர்களின் பங்களிப்புடன் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இதேவேளை கல்வி உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளரது அறிவுறுத்தலுக்கு அமைய பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த கிளீன் ஸ்ரீலங்கா விசேட செயற்திட்ட முன்னெடுப்பு கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட ல்முனை கமு/கமு/அஸ்-ஸூஹறா வித்தியாலயத்திலும் சிறப்பாக நடைபெற்றது
கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஐயந்தலால் ரத்னசேகர ன் ஆலோசனையின் பேரில் கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் இஸட்.ஏ.எம். பைசால் அறிவுறுத்தலுக்கு அமைவாக எம். எஸ். சஹூதுல் நஜீம் வழிகாட்டலில் பாடசாலை அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜீதிய்யா தலைமை இவ்வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த விசேட செயற்திட்டத்தின் போது நுளம்பு பெருகக்கூடிய இடங்கள் கண்டறியப்பட்டு அழித்தொழிக்கப்படுவதுடன , மாணவர்கள் மற்றும் ஊழியர்களிடையே நுளம்புகளால் பரவும் நோய்களைத் தடுப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில், பெற்றார், மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட பாடசாலை சமூகத்தினர் பெருந்தொகையானோர் கலந்து கொண்டு பாடசாலை சூழலையும் கட்டிடங்களையும் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
பாடசாலைகளில் இடம்பெற்ற கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் நடைபெறும் கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்திற்கு அமைய வவுனியா செட்டிகுளம் மகா வித்தியாலயத்தின் கல்லூரியின் முதல்வர் ச.தயாகரன் தலைமையில் நிகழ்வு ஆரம்பமானது.நிகழ்வில் வவுனியா தெற்கு வலயக்கல்வி அலுவகத்தின் பிரதி நிதியாக திட்டமிடல் பிரதி கல்வி பணிப்பாளர் ஜெனால்ட் அன்ரனி மற்றும் கோட்ட கல்வி பணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.பாடசாலை மாணவர்களின் சிரமதானமும், சூழலைப்பாதுகாப்போம் மற்றும் நாட்டை வளர்ப்போம் எனும் தலைப்பில் வீதி நாடகமும் இடம்பெற்றது. அத்துடன் மாணவர்களுக்கு சுகாதாரப் பழக்கவழக்கங்களும், உணவுப்பாதுகாப்பும் எனும் தலைப்பில் பிரதேச சுகாதாரப் பரிசோதகரினால் செயலமர்வு இடம்பெற்றதுடன் இலைக்கஞ்சியும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் மாணவர்களுக்கான தலைமைத்துவ செயலமர்வும் இடம்பெற்றது.இச் செயற்றிட்டம் செட்டிகுளம் பிரதேச சபை, செட்டிகுளம் பிரதேச செயலகம், செட்டிகுளம் பிராந்திய சுகாதார வைத்திய பணிமனை, செட்டிகுளம் பொலிஸ், இராணுவத்தினர், பெற்றோர், பழைய மாணவர் போன்றோர்களின் பங்களிப்புடன் இந்நிகழ்வு இடம்பெற்றது.இதேவேளை கல்வி உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளரது அறிவுறுத்தலுக்கு அமைய பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த கிளீன் ஸ்ரீலங்கா விசேட செயற்திட்ட முன்னெடுப்பு கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட ல்முனை கமு/கமு/அஸ்-ஸூஹறா வித்தியாலயத்திலும் சிறப்பாக நடைபெற்றதுகிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஐயந்தலால் ரத்னசேகர ன் ஆலோசனையின் பேரில் கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் இஸட்.ஏ.எம். பைசால் அறிவுறுத்தலுக்கு அமைவாக எம். எஸ். சஹூதுல் நஜீம் வழிகாட்டலில் பாடசாலை அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜீதிய்யா தலைமை இவ்வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.இந்த விசேட செயற்திட்டத்தின் போது நுளம்பு பெருகக்கூடிய இடங்கள் கண்டறியப்பட்டு அழித்தொழிக்கப்படுவதுடன , மாணவர்கள் மற்றும் ஊழியர்களிடையே நுளம்புகளால் பரவும் நோய்களைத் தடுப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு திட்டமிடப்பட்டுள்ளது.இந்த நிகழ்வில், பெற்றார், மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட பாடசாலை சமூகத்தினர் பெருந்தொகையானோர் கலந்து கொண்டு பாடசாலை சூழலையும் கட்டிடங்களையும் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.