2026ம் ஆண்டு வரவு செலவுதிட்ட ஒதுக்கீட்டின் கீழ் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக செயல்படுத்தப்படும் 'தமக்கென ஓர் இடம் -அழகான வாழ்க்கை" தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 55 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதன் அடிப்படையில் 55 பயனாளிகளுக்கு ஒரு மில்லியன் ரூபாய் ஒதுக்கீட்டில் 55 வீடுகள் நிர்மாணிக்கப்படுகின்றது.
இந்த திட்டத்தின் முதல் கட்டமாக வற்றாப்பளை மற்றும் நீராவிப்பிட்டி பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை தேசிய வீடமைப்பு நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர் கௌரவ ரீ.பீ.சரத் அவர்கள் இன்றைய தினம்(15) பயனாளர்களிடம் கையளித்தார்.
இந்த கையளிப்பு நிகழ்வில் கூட்டுறவு பிரதி அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமான கௌரவ உபாலி சமரசிங்க, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ செ.திலகநாதன், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு அ.உமாமகேஸ்வரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் கரைதுறைப்பற்று உதவிப் பிரதேச செயலாளர், கரைதுறைபற்று பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், கிராம அலுவலகர்கள், பிரஜாசக்தி உறுப்பினர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தின் மூலம் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் மக்களிடம் கையளிப்பு 2026ம் ஆண்டு வரவு செலவுதிட்ட ஒதுக்கீட்டின் கீழ் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக செயல்படுத்தப்படும் 'தமக்கென ஓர் இடம் -அழகான வாழ்க்கை" தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 55 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.அதன் அடிப்படையில் 55 பயனாளிகளுக்கு ஒரு மில்லியன் ரூபாய் ஒதுக்கீட்டில் 55 வீடுகள் நிர்மாணிக்கப்படுகின்றது.இந்த திட்டத்தின் முதல் கட்டமாக வற்றாப்பளை மற்றும் நீராவிப்பிட்டி பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை தேசிய வீடமைப்பு நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர் கௌரவ ரீ.பீ.சரத் அவர்கள் இன்றைய தினம்(15) பயனாளர்களிடம் கையளித்தார்.இந்த கையளிப்பு நிகழ்வில் கூட்டுறவு பிரதி அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமான கௌரவ உபாலி சமரசிங்க, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ செ.திலகநாதன், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு அ.உமாமகேஸ்வரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.மேலும் கரைதுறைப்பற்று உதவிப் பிரதேச செயலாளர், கரைதுறைபற்று பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், கிராம அலுவலகர்கள், பிரஜாசக்தி உறுப்பினர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.