• Oct 19 2024

யாழ். போதனாவில் செயற்பாடற்றிருக்கும் நரம்புச் சிகிச்சைப் பிரிவு! நோயாளிகள் பெரும் அவதி samugammedia

Chithra / Apr 12th 2023, 1:43 pm
image

Advertisement

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நீண்ட காலமாக முறையற்ற விதத்தில் நரம்புச் சிகிச்சைப் பிரிவானது செயற்பாடற்றுக் காணப்படுவதனால் நோயாளிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்.

குவைத் நாட்டின் நிதியுதவியில் சிகிச்சைகளை உரிய முறையில் மேற்கொள்ளக்கூடியவாறான பல்வேறு விதமான அபிவிருத்திகளை மேற்கொண்டு  இலங்கையின் சிறந்த நரம்புச் சிகிச்சைப் பிரிவாகக் காணப்படுகின்ற  போதும் கொரோனா காலப்பகுதிக்குப் பின்னர் இதன் மூலமான சேவைகள் ஒழுங்கு முறையில் இடம்பெறுவதில்லை.


இப் பிரிவிற்கென உரிய வைத்தியர்கள் உட்பட உரிய சேவை உத்தியோகஸ்தர்கள் காணப்படும் நிலையில் குறிப்பாக ஒரு நாளைக்கு 10க்கு மேற்பட்ட பக்கவாத நோயாளர்கள் சிகிச்சைக்காக வருகின்ற நிலை காணப்படுகின்றது. 

ஆனால் அவர்கள் தங்கியிருந்து சிகிச்சையினைப் பெறுவதற்கான எவ்வித  சாதகமான ஏற்பாடுகளும் காணப்படாத இடர் நிலை தொடர்ந்தவண்ணமுள்ளது.


யாழ். போதனாவில் செயற்பாடற்றிருக்கும் நரம்புச் சிகிச்சைப் பிரிவு நோயாளிகள் பெரும் அவதி samugammedia யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நீண்ட காலமாக முறையற்ற விதத்தில் நரம்புச் சிகிச்சைப் பிரிவானது செயற்பாடற்றுக் காணப்படுவதனால் நோயாளிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்.குவைத் நாட்டின் நிதியுதவியில் சிகிச்சைகளை உரிய முறையில் மேற்கொள்ளக்கூடியவாறான பல்வேறு விதமான அபிவிருத்திகளை மேற்கொண்டு  இலங்கையின் சிறந்த நரம்புச் சிகிச்சைப் பிரிவாகக் காணப்படுகின்ற  போதும் கொரோனா காலப்பகுதிக்குப் பின்னர் இதன் மூலமான சேவைகள் ஒழுங்கு முறையில் இடம்பெறுவதில்லை.இப் பிரிவிற்கென உரிய வைத்தியர்கள் உட்பட உரிய சேவை உத்தியோகஸ்தர்கள் காணப்படும் நிலையில் குறிப்பாக ஒரு நாளைக்கு 10க்கு மேற்பட்ட பக்கவாத நோயாளர்கள் சிகிச்சைக்காக வருகின்ற நிலை காணப்படுகின்றது. ஆனால் அவர்கள் தங்கியிருந்து சிகிச்சையினைப் பெறுவதற்கான எவ்வித  சாதகமான ஏற்பாடுகளும் காணப்படாத இடர் நிலை தொடர்ந்தவண்ணமுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement