• Nov 28 2024

யாழ். கல்லூண்டாயில் விபத்துக்குள்ளான முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

Tamil nila / Sep 25th 2024, 10:23 pm
image

யாழ்ப்பாணம் - கல்லூண்டாயில் விபத்துக்குள்ளான முதியவர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். இதன்போது அராலி கிழக்கு, அம்மன் கோவிலடி பகுதியைச் சேர்ந்த வைரமுத்து முருகையா (வயது 70) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த முதியவர் கடந்த 8ஆம் மாதம் 26ஆம் திகதி துவிச்சக்கர வண்டியில் யாழ்ப்பாணத்தில் இருந்து, அராலியில் உள்ள தனது வீடு நோக்கி வந்துகொண்டிருந்தவேளை கல்லூண்டாய் பகுதியில் பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்தில் சிக்கியுள்ளார்.

இதன் போது அவர் மயக்கமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின்னர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

தொடர்ச்சியாக மயக்க நிலையில் இருந்ததனால் வைத்தியசாலையால் அவருக்கு சிகிச்சை வழங்க முடியாத நிலையில் இருந்து கடந்த 20ஆம் திகதி வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில் இன்றையதினம் உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.


யாழ். கல்லூண்டாயில் விபத்துக்குள்ளான முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு யாழ்ப்பாணம் - கல்லூண்டாயில் விபத்துக்குள்ளான முதியவர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். இதன்போது அராலி கிழக்கு, அம்மன் கோவிலடி பகுதியைச் சேர்ந்த வைரமுத்து முருகையா (வயது 70) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,குறித்த முதியவர் கடந்த 8ஆம் மாதம் 26ஆம் திகதி துவிச்சக்கர வண்டியில் யாழ்ப்பாணத்தில் இருந்து, அராலியில் உள்ள தனது வீடு நோக்கி வந்துகொண்டிருந்தவேளை கல்லூண்டாய் பகுதியில் பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்தில் சிக்கியுள்ளார்.இதன் போது அவர் மயக்கமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின்னர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.தொடர்ச்சியாக மயக்க நிலையில் இருந்ததனால் வைத்தியசாலையால் அவருக்கு சிகிச்சை வழங்க முடியாத நிலையில் இருந்து கடந்த 20ஆம் திகதி வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில் இன்றையதினம் உயிரிழந்துள்ளார்.அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement