யாழ். கலாசார மத்திய நிலையத்தின் பெயர் திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டமையை இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2015ஆம் ஆண்டு இலங்கை வந்தபோது அப்போது யாழ்ப்பாணத்தில் 11 மில்லியன் டொலர் மதிப்பில் கலாசார மையம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார்.
இந்தக் கலாசார மையத்தை 2023 பெப்ரவரி மாதம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே திறந்து வைத்தனர்.
இந்தியா, இலங்கை நல்லுறவை வலுப்படுத்தும் விதமாக இந்திய நிதியுதவியுடன் கட்டப்பட்ட யாழ்ப்பாண கலாசார மையத்துக்கு தற்போது திருவள்ளுவர் பண்பாட்டு மையம் என பெயரிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருவள்ளுவர் பண்பாட்டு மையத்துக்கு பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில்,
யாழ்ப்பாணத்தில் இந்திய நிதியுதவியுடன் கட்டப்பட்ட கலாசார மையத்துக்கு திருவள்ளுவர் பெயர் சூட்டியதை வரவேற்கிறோம். இது திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்துவதுடன், இந்தியா மற்றும் இலங்கை மக்களுக்கு இடையே உள்ள ஆழமான கலாசார, மொழியியல், வரலாறு மற்றும் நாகரீக பிணைப்புகளுக்கு சான்று என பதிவிட்டுள்ளார்.
குறித்த பெயர் மாற்ற வைபவம் சம்பிரதாயபூர்வமாக நேற்று யாழ். கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.
இதன் பொழுது புத்த சாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கிணிடும சுனில் செனவி, கடற்றொழில் நீரியல் வளதுறை அமைச்சர் சந்திரசேகரம், இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா இணைந்து பெயரை டிஜிட்டல் திரை மூலம் மாற்றம் செய்தனர்.
இதன் பொழுது யாழ். மாநகர சபை ஆணையாளர் கிருஷ்ணேந்திரன், யாழ் இந்திய துணை தூதுவர் சாய் முரளி, புத்த சாசன,ச மய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர், யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர், பேராசிரியர்கள், சமய தலைவர்கள், பத்திரிகை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்
யாழ். கலாசார மத்திய நிலையத்திற்கு திருவள்ளுவர் பெயர் - இந்தியப் பிரதமர் மோடி வரவேற்பு யாழ். கலாசார மத்திய நிலையத்தின் பெயர் திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டமையை இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2015ஆம் ஆண்டு இலங்கை வந்தபோது அப்போது யாழ்ப்பாணத்தில் 11 மில்லியன் டொலர் மதிப்பில் கலாசார மையம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். இந்தக் கலாசார மையத்தை 2023 பெப்ரவரி மாதம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே திறந்து வைத்தனர்.இந்தியா, இலங்கை நல்லுறவை வலுப்படுத்தும் விதமாக இந்திய நிதியுதவியுடன் கட்டப்பட்ட யாழ்ப்பாண கலாசார மையத்துக்கு தற்போது திருவள்ளுவர் பண்பாட்டு மையம் என பெயரிடப்பட்டுள்ளது.இந்நிலையில், திருவள்ளுவர் பண்பாட்டு மையத்துக்கு பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக, பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், யாழ்ப்பாணத்தில் இந்திய நிதியுதவியுடன் கட்டப்பட்ட கலாசார மையத்துக்கு திருவள்ளுவர் பெயர் சூட்டியதை வரவேற்கிறோம். இது திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்துவதுடன், இந்தியா மற்றும் இலங்கை மக்களுக்கு இடையே உள்ள ஆழமான கலாசார, மொழியியல், வரலாறு மற்றும் நாகரீக பிணைப்புகளுக்கு சான்று என பதிவிட்டுள்ளார்.குறித்த பெயர் மாற்ற வைபவம் சம்பிரதாயபூர்வமாக நேற்று யாழ். கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது. இதன் பொழுது புத்த சாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கிணிடும சுனில் செனவி, கடற்றொழில் நீரியல் வளதுறை அமைச்சர் சந்திரசேகரம், இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா இணைந்து பெயரை டிஜிட்டல் திரை மூலம் மாற்றம் செய்தனர்.இதன் பொழுது யாழ். மாநகர சபை ஆணையாளர் கிருஷ்ணேந்திரன், யாழ் இந்திய துணை தூதுவர் சாய் முரளி, புத்த சாசன,ச மய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர், யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர், பேராசிரியர்கள், சமய தலைவர்கள், பத்திரிகை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்