• May 12 2024

யாழ். விமான நிலைய மேம்பாட்டுக்கு ஆதரவளிக்க தயார்! - இந்தியா அறிவிப்பு

Chithra / Dec 13th 2022, 8:35 am
image

Advertisement

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் வசதிகளை மேம்படுத்துவதற்கும், விரிவுபடுத்துவதற்கும் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற இந்தியா தயாராக உள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இதனை தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் - சென்னைக்கு இடையேயான அலையன்ஸ் எயார் விமான சேவையை மீண்டும் ஆரம்பிப்பதை குறிக்கும் வகையில் நேற்று விமான நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது ஒலிப்பரப்பட்ட பதிவு செய்யப்பட்ட உரையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.


இந்த சேவையின் மேம்படுத்தலுக்காக இலங்கை அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்த பாக்லே, இந்தியாவுக்கும் யாழ்ப்பாணம் மற்றும் இலங்கையின் பிற இடங்களுக்கு இடையே நேரடி மற்றும் விரைவான விமானப் பயணம், வர்த்தகம் மற்றும் சுற்றுலாவை குறிப்பிடத்தக்க வகையில் மேம்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.

இது இரு நாட்டு மக்களிடையே பாரம்பரிய உறவுகளை வலுப்படுத்துவதுடன் வணிகத்தின் சிறிய மற்றும் நடுத்தர பிரிவுகளுக்கும் பயனளிக்கும் என்றும் பாக்லே குறிப்பிட்டுள்ளார்.

யாழ். விமான நிலைய மேம்பாட்டுக்கு ஆதரவளிக்க தயார் - இந்தியா அறிவிப்பு யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் வசதிகளை மேம்படுத்துவதற்கும், விரிவுபடுத்துவதற்கும் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற இந்தியா தயாராக உள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது.இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இதனை தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணம் - சென்னைக்கு இடையேயான அலையன்ஸ் எயார் விமான சேவையை மீண்டும் ஆரம்பிப்பதை குறிக்கும் வகையில் நேற்று விமான நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது ஒலிப்பரப்பட்ட பதிவு செய்யப்பட்ட உரையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.இந்த சேவையின் மேம்படுத்தலுக்காக இலங்கை அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்த பாக்லே, இந்தியாவுக்கும் யாழ்ப்பாணம் மற்றும் இலங்கையின் பிற இடங்களுக்கு இடையே நேரடி மற்றும் விரைவான விமானப் பயணம், வர்த்தகம் மற்றும் சுற்றுலாவை குறிப்பிடத்தக்க வகையில் மேம்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.இது இரு நாட்டு மக்களிடையே பாரம்பரிய உறவுகளை வலுப்படுத்துவதுடன் வணிகத்தின் சிறிய மற்றும் நடுத்தர பிரிவுகளுக்கும் பயனளிக்கும் என்றும் பாக்லே குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement