யாழ்ப்பாண நகரில் கடந்த நவம்பர் மாதம் 4ஆம் திகதி ஓர் விடுதியில் இடம்பெற்று சர்ச்சையை உருவாக்கிய நிகழ்வை ஒத்த நிகழ்விற்கு மற்றுமோர் அனுமதி யாழ் மாநகர சபையிடம் கோரப்பட்டுள்ளது.
நவம்பர் மாதம் இடம்பெற்ற நிகழ்வில் சமயம், கலாசார, விழுமியங்களை பாதிக்காத வகையில் சட்டத்திற்கு உட்பட்டவாறு நிகழ்வுகளை நடாத்துமாறு மாநகர சபை அறிவுறுத்தல் வழங்கியதன் பெயரில் விடுதி உரிமையாளரும் இடம் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறு இடம்பெற்ற நிகழ்வில் மது விருந்து இடம்பெற்றதோடு சிறுமிகளும் பங்குகொண்டமை கண்டுகொள்ளப்பட்டதனால் அதில் பெரும் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன.
குறித்த நிகழ்வில் பங்கேற்றவர்கள் போதைப்பொருட்களை பயன்படுத்தியதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தது.
இதனால் இம்முறை அனுமதி கோரியமை தொடர்பில் யாழ்ப்பாணம் மாநகர சபை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன் காரணமாக இந் நிகழ்வினை அனுமதிக்கவே முடியாது என யாழ் மாநகர சபையின் ஆணையாளர் ஒப்பமிட்டு யாழ்ப்பாணம் பொலிஸாருக்கும் விடுதி உரிமையாளருக்கும் கடிதம் மூலம் அறிவித்துள்ளனர்.
யாழ். விடுதியில் மீண்டும் சர்ச்சைக்குரிய நிகழ்வை நடத்த அனுமதியா. வெளியான தகவல் யாழ்ப்பாண நகரில் கடந்த நவம்பர் மாதம் 4ஆம் திகதி ஓர் விடுதியில் இடம்பெற்று சர்ச்சையை உருவாக்கிய நிகழ்வை ஒத்த நிகழ்விற்கு மற்றுமோர் அனுமதி யாழ் மாநகர சபையிடம் கோரப்பட்டுள்ளது.நவம்பர் மாதம் இடம்பெற்ற நிகழ்வில் சமயம், கலாசார, விழுமியங்களை பாதிக்காத வகையில் சட்டத்திற்கு உட்பட்டவாறு நிகழ்வுகளை நடாத்துமாறு மாநகர சபை அறிவுறுத்தல் வழங்கியதன் பெயரில் விடுதி உரிமையாளரும் இடம் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டது.இவ்வாறு இடம்பெற்ற நிகழ்வில் மது விருந்து இடம்பெற்றதோடு சிறுமிகளும் பங்குகொண்டமை கண்டுகொள்ளப்பட்டதனால் அதில் பெரும் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன.குறித்த நிகழ்வில் பங்கேற்றவர்கள் போதைப்பொருட்களை பயன்படுத்தியதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தது.இதனால் இம்முறை அனுமதி கோரியமை தொடர்பில் யாழ்ப்பாணம் மாநகர சபை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.இதன் காரணமாக இந் நிகழ்வினை அனுமதிக்கவே முடியாது என யாழ் மாநகர சபையின் ஆணையாளர் ஒப்பமிட்டு யாழ்ப்பாணம் பொலிஸாருக்கும் விடுதி உரிமையாளருக்கும் கடிதம் மூலம் அறிவித்துள்ளனர்.