கடந்த ஆட்சியாளர்கள் மீது குற்றஞ்சுமத்துவதை நிறுத்திவிட்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாவிட்டால் உயிரிழப்புக்கள் உட்பட பொருளாதார சவால்களையும் எதிர்கொள்ள நேரிடும் என ஐக்கிய மக்கள் சக்தி எச்சரித்துள்ளது.
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா இவ்வாறு எச்சரித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டில் அண்மைக்காலமாக ஏற்படும் சகல பிரச்சினைகளுக்கும் பொறுப்பு கூற வேண்டியது அரசாங்கமல்ல, குரங்குகளே.
நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்தடைக்கு குரங்குகளே காரணம் என அமைச்சர் கூறிய போதிலும், குரங்குகள் அங்கு வரவில்லை என பாணந்துரை துணை மின்நிலையத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர் குறிப்பிடுகின்றார்.
இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.
அவ்வாறில்லை என்றால் வைத்தியசாலைகளில் மின்தடையால் உயிரிழப்புக்கள் ஏற்படக் கூடிய அதேவேளை பொருளாதார சவால்களையும் எதிர்கொள்ள நேரிடும்.
அரசியல் நெருக்கடிகளின் போது தமது சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டமைக்காக அரசியல்வாதிகள் இழப்பீடுகள் பெற்றுக் கொண்டமை தொடர்பில் பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் அந்த இழப்பீட்டு தொகையை சட்ட ரீதியாகப் பெற்றுள்ளார்களா? இல்லையா என்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்.
வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டதாலேயே இழப்பீட்டையும் செலுத்த வேண்டியேற்பட்டது. இவ்வாறு வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டதன் பின்னணியிலுள்ள கட்சி எது என்பதும் அனைவருக்கும் தெரியும்.
அந்த வகையில் இழப்பீட்டைப் பெற்றுக் கொண்டமை தவறு என்றால், அதற்கான சூழலை ஏற்படுத்தியதும் தவறு தான். எனவே அதற்கு காரணமானவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார்.
பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாவிட்டால் உயிரிழப்புக்கள் கூட ஏற்படலாம் - அரசை எச்சரித்த ஹர்ஷன கடந்த ஆட்சியாளர்கள் மீது குற்றஞ்சுமத்துவதை நிறுத்திவிட்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாவிட்டால் உயிரிழப்புக்கள் உட்பட பொருளாதார சவால்களையும் எதிர்கொள்ள நேரிடும் என ஐக்கிய மக்கள் சக்தி எச்சரித்துள்ளது.கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா இவ்வாறு எச்சரித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,நாட்டில் அண்மைக்காலமாக ஏற்படும் சகல பிரச்சினைகளுக்கும் பொறுப்பு கூற வேண்டியது அரசாங்கமல்ல, குரங்குகளே. நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்தடைக்கு குரங்குகளே காரணம் என அமைச்சர் கூறிய போதிலும், குரங்குகள் அங்கு வரவில்லை என பாணந்துரை துணை மின்நிலையத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர் குறிப்பிடுகின்றார்.இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். அவ்வாறில்லை என்றால் வைத்தியசாலைகளில் மின்தடையால் உயிரிழப்புக்கள் ஏற்படக் கூடிய அதேவேளை பொருளாதார சவால்களையும் எதிர்கொள்ள நேரிடும்.அரசியல் நெருக்கடிகளின் போது தமது சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டமைக்காக அரசியல்வாதிகள் இழப்பீடுகள் பெற்றுக் கொண்டமை தொடர்பில் பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அந்த இழப்பீட்டு தொகையை சட்ட ரீதியாகப் பெற்றுள்ளார்களா இல்லையா என்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும். வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டதாலேயே இழப்பீட்டையும் செலுத்த வேண்டியேற்பட்டது. இவ்வாறு வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டதன் பின்னணியிலுள்ள கட்சி எது என்பதும் அனைவருக்கும் தெரியும். அந்த வகையில் இழப்பீட்டைப் பெற்றுக் கொண்டமை தவறு என்றால், அதற்கான சூழலை ஏற்படுத்தியதும் தவறு தான். எனவே அதற்கு காரணமானவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார்.