• Nov 26 2024

இலங்கையை வங்குரோத்திலிருந்து நாணய நிதியம் முழுமையாகப் பிணை எடுத்துள்ளதா ?

Tamil nila / Jun 13th 2024, 11:04 pm
image

இரண்டாவது பரிசீலனைக்குப் பிறகு இலங்கையை பொருளாதார வங்குரோத்திலிருந்து பிணை எடுப்பதற்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதியின்  மூன்றாவது தவணைக்கு சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் அளித்துள்ளது என அதன் உத்தியோக பூர்வ அறிவிப்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரிவாக்கப்பட்ட நிதி வசதி ஆதரவு திட்டம் , இலங்கையின் பெரும்பாக பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் கடன் கட்டும் நிலைத்த தன்மை ஆகியவற்றை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்கள் மீதான பொருளாதார தாக்கத்தை தணித்தல், வெளிப்புறரீதியாக பொருண்மிய பாதுகாப்பு வலயத்தை மீண்டும் கட்டியெழுப்புதல், நிதித்துறை ஸ்திரத்தன்மையை பாதுகாத்தல் மற்றும் நிர்வாக மறுசீரமைப்பு மற்றும் வளர்ச்சித் திறனை வலுப்படுத்துதல் ஆகியவற்றுக்காகவும் சர்வதேச நாணய நிதியத்தால்  விரிவாக்கப்பட்ட நிதி வசதி -ஆதரவுத் திட்டம்   இலங்கைக்கு வழங்கப்படுகிறது. 

சர்வதேச நாணய நிதியத்தின் பல மட்டப் பிரதி நிதிகளுடன் பலகட்டப் பேச்சுவார்த்தைகள் இலங்கை மத்திய வங்கி, திறைசேரி ஆகியவற்றின் நிபுணர்களினால் 2022, 2023, 2024 ஆகிய ஆண்டுகளில் இடம்பெற்றன.

மிக நீண்ட கடினமான உள் நாட்டு மற்றும் வெளி நாட்டு கடன் மறு சீரமைப்புக்களை மேற்கொள்ளவும் வரி மறு சீரமைப்புக்களை மேற்கொள்ளவும் ஊழல் மோசடி மிக்க இலங்கையின் அரச துறைகளை சீரமைக்க சட்டதிட்டங்களை உருவாக்கி அமுல்படுத்தவும் இலங்கை அரசாங்கம் சர்வ தேச நாணய நிதியத்துடன்  உடன்படிக்கைகளை மேற்கொண்டது.

அந்த மறு சீரமைப்பு நடவடிக்கைகளை இலங்கை மேற்கொண்டவண்ணம் உள்ளதாக நாணய நிதியத்தால் ஆய்வுகளினூடாக நம்பப்படும் நிலையில் அதில் ஓரளவு திருப்தி கண்ட நிலையில் , இரண்டாவது பரிசீலனைக்குப் பிறகு இலங்கையை பொருளாதார வங்குரோத்திலிருந்து பிணை எடுப்பதற்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதியின்  மூன்றாவது தவணைக்கு சர்வதேச நாணய நிதியம்  ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த ஒப்புதல் இலங்கையின் தற்போதய ஜனாதிபதியின் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி அடுத்து வரும் தேர்தல்களில் சாதகமான விளைவுகளை எட்டுவதற்கு உதவக்கூடும் என ஐக்கிய தேசிய கட்சி ஆதரவு ஊடகங்கள் ஆரூடம் கூறிவருவது தெரிந்ததே

யாரும் ஜனாதிப் பொறுப்பை ஏற்க பயந்தபோது, பொறுப்பைத் துணிந்து ஏற்று, வரிசை யுகத்திலிருந்து தான் நாட்டை மீட்டதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மைக் காலமாக மீண்டும் மீண்டும் இலங்கை மக்களுக்கு கூறிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையை வங்குரோத்திலிருந்து நாணய நிதியம் முழுமையாகப் பிணை எடுத்துள்ளதா இரண்டாவது பரிசீலனைக்குப் பிறகு இலங்கையை பொருளாதார வங்குரோத்திலிருந்து பிணை எடுப்பதற்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதியின்  மூன்றாவது தவணைக்கு சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் அளித்துள்ளது என அதன் உத்தியோக பூர்வ அறிவிப்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.விரிவாக்கப்பட்ட நிதி வசதி ஆதரவு திட்டம் , இலங்கையின் பெரும்பாக பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் கடன் கட்டும் நிலைத்த தன்மை ஆகியவற்றை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்கள் மீதான பொருளாதார தாக்கத்தை தணித்தல், வெளிப்புறரீதியாக பொருண்மிய பாதுகாப்பு வலயத்தை மீண்டும் கட்டியெழுப்புதல், நிதித்துறை ஸ்திரத்தன்மையை பாதுகாத்தல் மற்றும் நிர்வாக மறுசீரமைப்பு மற்றும் வளர்ச்சித் திறனை வலுப்படுத்துதல் ஆகியவற்றுக்காகவும் சர்வதேச நாணய நிதியத்தால்  விரிவாக்கப்பட்ட நிதி வசதி -ஆதரவுத் திட்டம்   இலங்கைக்கு வழங்கப்படுகிறது. சர்வதேச நாணய நிதியத்தின் பல மட்டப் பிரதி நிதிகளுடன் பலகட்டப் பேச்சுவார்த்தைகள் இலங்கை மத்திய வங்கி, திறைசேரி ஆகியவற்றின் நிபுணர்களினால் 2022, 2023, 2024 ஆகிய ஆண்டுகளில் இடம்பெற்றன.மிக நீண்ட கடினமான உள் நாட்டு மற்றும் வெளி நாட்டு கடன் மறு சீரமைப்புக்களை மேற்கொள்ளவும் வரி மறு சீரமைப்புக்களை மேற்கொள்ளவும் ஊழல் மோசடி மிக்க இலங்கையின் அரச துறைகளை சீரமைக்க சட்டதிட்டங்களை உருவாக்கி அமுல்படுத்தவும் இலங்கை அரசாங்கம் சர்வ தேச நாணய நிதியத்துடன்  உடன்படிக்கைகளை மேற்கொண்டது.அந்த மறு சீரமைப்பு நடவடிக்கைகளை இலங்கை மேற்கொண்டவண்ணம் உள்ளதாக நாணய நிதியத்தால் ஆய்வுகளினூடாக நம்பப்படும் நிலையில் அதில் ஓரளவு திருப்தி கண்ட நிலையில் , இரண்டாவது பரிசீலனைக்குப் பிறகு இலங்கையை பொருளாதார வங்குரோத்திலிருந்து பிணை எடுப்பதற்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதியின்  மூன்றாவது தவணைக்கு சர்வதேச நாணய நிதியம்  ஒப்புதல் அளித்துள்ளது.இந்த ஒப்புதல் இலங்கையின் தற்போதய ஜனாதிபதியின் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி அடுத்து வரும் தேர்தல்களில் சாதகமான விளைவுகளை எட்டுவதற்கு உதவக்கூடும் என ஐக்கிய தேசிய கட்சி ஆதரவு ஊடகங்கள் ஆரூடம் கூறிவருவது தெரிந்ததேயாரும் ஜனாதிப் பொறுப்பை ஏற்க பயந்தபோது, பொறுப்பைத் துணிந்து ஏற்று, வரிசை யுகத்திலிருந்து தான் நாட்டை மீட்டதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மைக் காலமாக மீண்டும் மீண்டும் இலங்கை மக்களுக்கு கூறிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement