• Nov 14 2024

மதுபானசாலை அனுமதிப் பத்திரத்தை நான் பெற்றுக்கொண்டேனா? யாழில் பதிலளித்த அங்கஜன் எம்.பி..!

Sharmi / Aug 28th 2024, 3:19 pm
image

மதுபானசாலை அனுமதி பத்திரத்தை நான் பெற்றதாக கூறிய சுதந்திர கட்சியின் செயலாளர் எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை. இவ்வாறான கதைகளுக்கு பதில் சொல்லப்போனால் அவர்களது நிலைக்கு நாம் தரமிறங்கவேண்டும் என சிறிலங்கா சுதந்திர கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான அங்கஜன் இராமநாதன் விசனம் வெளியிட்டார்.

யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம்(27)  நடைபெற்ற இளையோருடனான கேள்வி பதில் நிகழ்ச்சியொன்று கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அங்கஜன் இராமநாதன் இவ்வாறு தெரிவித்தார்.

மதுபான சாலை விவகாரம் தொடர்பாக இம்முறை தேர்தலில் அதிகம் விவாதிக்கப்படுகிறது. ஆதாரங்களற்ற விவாதங்களாகவே அவை காணப்படுகின்றன.

தேர்தல் பிரசாரங்களில் ஒருவரை ஒருவர் சேறுபூசும் தன்மை காணப்படுகின்றது.

எனது சுதந்திரக் கட்சியின் செயலாளர் தனிப்பட்ட நோக்கங்களுக்காக, நான் எனது மக்களுக்காக ஒரு தீர்மானத்தை எடுத்துவிட்டேன் என்ற அடிப்படையில் ஜனாதிபதி வேட்பாளர் இருக்கும் அரசியல் மேடையில் இதனை தெரிவித்தார்.

நானே ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கை சின்னத்தில் தெரிவு செய்யப்பட்ட ஒரே பாராளுமன்ற உறுப்பினர். நான் போகும் இடமே ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செல்லும் இடமாக பார்க்கப்படும்.

அவருடைய தேவை என்னை ஒரிடத்தில் சேர்க்கவேண்டும் என்று இருந்தார். சேராத இடத்தில் இவ்வாறு கதைகள் வருகிறது. ஆனால் அதற்கு எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை. இவ்வாறான கதைகளுக்கு பதில் சொல்லப்போனால் அவர்களது நிலைக்கு நாம் தரமிறங்கவேண்டும் எனவும் அங்கஜன் இராமநாதன் பதிலளித்தார்.


மதுபானசாலை அனுமதிப் பத்திரத்தை நான் பெற்றுக்கொண்டேனா யாழில் பதிலளித்த அங்கஜன் எம்.பி. மதுபானசாலை அனுமதி பத்திரத்தை நான் பெற்றதாக கூறிய சுதந்திர கட்சியின் செயலாளர் எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை. இவ்வாறான கதைகளுக்கு பதில் சொல்லப்போனால் அவர்களது நிலைக்கு நாம் தரமிறங்கவேண்டும் என சிறிலங்கா சுதந்திர கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான அங்கஜன் இராமநாதன் விசனம் வெளியிட்டார்.யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம்(27)  நடைபெற்ற இளையோருடனான கேள்வி பதில் நிகழ்ச்சியொன்று கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அங்கஜன் இராமநாதன் இவ்வாறு தெரிவித்தார்.மதுபான சாலை விவகாரம் தொடர்பாக இம்முறை தேர்தலில் அதிகம் விவாதிக்கப்படுகிறது. ஆதாரங்களற்ற விவாதங்களாகவே அவை காணப்படுகின்றன.தேர்தல் பிரசாரங்களில் ஒருவரை ஒருவர் சேறுபூசும் தன்மை காணப்படுகின்றது.எனது சுதந்திரக் கட்சியின் செயலாளர் தனிப்பட்ட நோக்கங்களுக்காக, நான் எனது மக்களுக்காக ஒரு தீர்மானத்தை எடுத்துவிட்டேன் என்ற அடிப்படையில் ஜனாதிபதி வேட்பாளர் இருக்கும் அரசியல் மேடையில் இதனை தெரிவித்தார்.நானே ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கை சின்னத்தில் தெரிவு செய்யப்பட்ட ஒரே பாராளுமன்ற உறுப்பினர். நான் போகும் இடமே ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செல்லும் இடமாக பார்க்கப்படும்.அவருடைய தேவை என்னை ஒரிடத்தில் சேர்க்கவேண்டும் என்று இருந்தார். சேராத இடத்தில் இவ்வாறு கதைகள் வருகிறது. ஆனால் அதற்கு எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை. இவ்வாறான கதைகளுக்கு பதில் சொல்லப்போனால் அவர்களது நிலைக்கு நாம் தரமிறங்கவேண்டும் எனவும் அங்கஜன் இராமநாதன் பதிலளித்தார்.

Advertisement

Advertisement

Advertisement