• May 24 2026

மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளிய ஹயேஸ் -இருவர் காயம் பதறவைக்கும் சிசிரிவி காட்சி!

shanu / Oct 26th 2025, 8:44 pm
image

மோட்டார் சைக்கிளொன்றை ஹயேஸ் மோதித் தள்ளியதில் இருவர் காளமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் - தட்டாதெரு பகுதியில்  இன்று இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

இது குறித்து மேலும் தெரிய வருகையில்,

குறித்த பகுதியில் ஒரு மோட்டார் சைக்கிளில் இருவர் இடது பக்கத்தால் பயணித்துக் கொண்டிருந்தனர். 

அதன்போது எதிர் திசையில் இருந்து வந்த ஹயேஸ் ரக வாகனமானது தனது பக்கத்தை விட்டு விலகி வலது பக்கமாக சென்று மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்து சம்பவித்துள்ளது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் பலத்த சேதமடைந்ததுடன் விபத்தினை ஏற்படுத்திய ஹயேஸ் ரக வாகனம் பகுதியில் சேதமடைந்துள்ளது.

விபத்து சம்பவம் குறித்து  யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளிய ஹயேஸ் -இருவர் காயம் பதறவைக்கும் சிசிரிவி காட்சி மோட்டார் சைக்கிளொன்றை ஹயேஸ் மோதித் தள்ளியதில் இருவர் காளமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் - தட்டாதெரு பகுதியில்  இன்று இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து மேலும் தெரிய வருகையில்,குறித்த பகுதியில் ஒரு மோட்டார் சைக்கிளில் இருவர் இடது பக்கத்தால் பயணித்துக் கொண்டிருந்தனர். அதன்போது எதிர் திசையில் இருந்து வந்த ஹயேஸ் ரக வாகனமானது தனது பக்கத்தை விட்டு விலகி வலது பக்கமாக சென்று மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்து சம்பவித்துள்ளது.இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் பலத்த சேதமடைந்ததுடன் விபத்தினை ஏற்படுத்திய ஹயேஸ் ரக வாகனம் பகுதியில் சேதமடைந்துள்ளது.விபத்து சம்பவம் குறித்து  யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement