• Oct 30 2025

வடக்கில் மின் தடையால் மக்கள் பெரும் அவதி; இணைய சேவைகளும் பெரும் பாதிப்பு!

shanuja / Oct 26th 2025, 10:00 pm
image

வடக்கு மாகாணத்தில் இன்று மின் தடையால் மக்களின் இயல்பு வாழ்க்கைக்குப் பெரும் தாக்கம் ஏற்பட்டுள்ளது. அத்துடன், வர்த்தக நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.


வடக்கு மாகாணத்தில் மன்னார் தவிர்ந்த ஏனைய நான்கு மாவட்டங்களில் இன்று ஞாயிற்றுக்கிழமை 13 மணித்தியாலங்கள் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

 

வவுனியா, மன்னார் 220 கே.வி. மின் பரிமாற்ற வடத்தை மாற்றியமைப்பதற்கான வேலைகளுக்காகவே இன்று காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய 4 மாவட்டங்களில் மின் துண்டிக்கப்பட்டுள்ளது.  


மின்சாரம் துண்டிப்பு குறித்து முன்கூட்டியே அறிவிப்பு விடுக்கப்பட்டிருந்ததால் சில வியாபாரிகள் முன்னாயத்த ஏற்பாடுகளை செய்திருந்தனர். 


எனினும், குளிர்சாதனத்தில் பொருட்களை வைத்திருந்து விற்பனை செய்யப்படும் பொருட்களை விற்கும் வியாபாரிகள் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர்.


இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பெரும்பாலானவர்கள் வீட்டில் இருக்கின்றனர். நீண்ட நேர மின் தடையால் இன்னல்களுக்கு மத்தியிலேயே அவர்கள் பொழுதைக் கழிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.


மின்தடையால் அலைபேசிகள் உள்ளிட்ட சாதனங்களுக்கு  இணையத்திலும் பெரும் கோளாறு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வடக்கில் மின் தடையால் மக்கள் பெரும் அவதி; இணைய சேவைகளும் பெரும் பாதிப்பு வடக்கு மாகாணத்தில் இன்று மின் தடையால் மக்களின் இயல்பு வாழ்க்கைக்குப் பெரும் தாக்கம் ஏற்பட்டுள்ளது. அத்துடன், வர்த்தக நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.வடக்கு மாகாணத்தில் மன்னார் தவிர்ந்த ஏனைய நான்கு மாவட்டங்களில் இன்று ஞாயிற்றுக்கிழமை 13 மணித்தியாலங்கள் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. வவுனியா, மன்னார் 220 கே.வி. மின் பரிமாற்ற வடத்தை மாற்றியமைப்பதற்கான வேலைகளுக்காகவே இன்று காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய 4 மாவட்டங்களில் மின் துண்டிக்கப்பட்டுள்ளது.  மின்சாரம் துண்டிப்பு குறித்து முன்கூட்டியே அறிவிப்பு விடுக்கப்பட்டிருந்ததால் சில வியாபாரிகள் முன்னாயத்த ஏற்பாடுகளை செய்திருந்தனர். எனினும், குளிர்சாதனத்தில் பொருட்களை வைத்திருந்து விற்பனை செய்யப்படும் பொருட்களை விற்கும் வியாபாரிகள் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர்.இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பெரும்பாலானவர்கள் வீட்டில் இருக்கின்றனர். நீண்ட நேர மின் தடையால் இன்னல்களுக்கு மத்தியிலேயே அவர்கள் பொழுதைக் கழிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.மின்தடையால் அலைபேசிகள் உள்ளிட்ட சாதனங்களுக்கு  இணையத்திலும் பெரும் கோளாறு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement