• May 15 2025

ஹயேஷிகா பெர்னாண்டோ நீதிமன்றில் ஆஜர்..!

Sharmi / May 14th 2025, 2:33 pm
image

கடந்த வாரம், ஹயேஷிகா பெர்னாண்டோவின் கணவரும் நிறுவன மேலாளரும் கட்டான பொலிஸாரால் ஒரு இளைஞனின் மர்மப் பகுதியில் தாக்கியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் பொலிஸாரிடமிருந்து தப்பி வந்த ‘டீச்சர் அம்மா’ எனப்படும் புலமைப்பரிசில் ஆசிரியர் ஹயேஷிகா பெர்னாண்டோ இன்று  பிற்பகல் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

அத்துடன் பிரதிவாதி சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ் பிரேமரத்ன, தனது கட்சிக்காரர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

மேலும் ஹயேஷிகா பெர்னாண்டோவை கைது செய்ய மூன்று பொலிஸ் குழுக்கள் நிறுத்தப்பட்டிருந்தாலும், அவர் இன்று நீதிமன்றத்தில் சரணடையும் வரை பொலிஸாரால் அவரை கைது செய்ய முடியவில்லை என்பதுடன், இதில்  சந்தேக நபர்களாக கைது செய்யப்பட்டவர்கள்  நேற்று வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஹயேஷிகா பெர்னாண்டோ நீதிமன்றில் ஆஜர். கடந்த வாரம், ஹயேஷிகா பெர்னாண்டோவின் கணவரும் நிறுவன மேலாளரும் கட்டான பொலிஸாரால் ஒரு இளைஞனின் மர்மப் பகுதியில் தாக்கியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.இந்த நிலையில் பொலிஸாரிடமிருந்து தப்பி வந்த ‘டீச்சர் அம்மா’ எனப்படும் புலமைப்பரிசில் ஆசிரியர் ஹயேஷிகா பெர்னாண்டோ இன்று  பிற்பகல் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.அத்துடன் பிரதிவாதி சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ் பிரேமரத்ன, தனது கட்சிக்காரர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.மேலும் ஹயேஷிகா பெர்னாண்டோவை கைது செய்ய மூன்று பொலிஸ் குழுக்கள் நிறுத்தப்பட்டிருந்தாலும், அவர் இன்று நீதிமன்றத்தில் சரணடையும் வரை பொலிஸாரால் அவரை கைது செய்ய முடியவில்லை என்பதுடன், இதில்  சந்தேக நபர்களாக கைது செய்யப்பட்டவர்கள்  நேற்று வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement