• Sep 20 2024

அனைத்து ஊடக நிறுவனங்களினதும் பிரதானிகள் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைப்பு!

Chithra / Aug 5th 2024, 9:21 am
image

Advertisement

 

இலங்கை அனைத்து ஊடக நிறுவனங்களினதும் பிரதானிகள் இன்றைய தினம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ. எல் ரத்நாயக்க இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளார்.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கலந்துரையாடும் நோக்கில் இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இன்று பிற்பகல் ஊடக அமைச்சின் செயலாளர், அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் அரச ஊடகங்களின் பிரதானிகள் ஆகியோர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாளை முதல் அமைச்சர் மட்டத்தில் அமைச்சின் செயலாளர்கள், மேலதிக செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டு கலந்துரையாட திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்துவதற்கு தேவையான பின்னணியை உருவாக்கும் நோக்கில் இந்த சந்திப்புகள் நடத்தப்படுவதாக ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். 

அனைத்து ஊடக நிறுவனங்களினதும் பிரதானிகள் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைப்பு  இலங்கை அனைத்து ஊடக நிறுவனங்களினதும் பிரதானிகள் இன்றைய தினம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ. எல் ரத்நாயக்க இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளார்.எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கலந்துரையாடும் நோக்கில் இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, இன்று பிற்பகல் ஊடக அமைச்சின் செயலாளர், அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் அரச ஊடகங்களின் பிரதானிகள் ஆகியோர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.நாளை முதல் அமைச்சர் மட்டத்தில் அமைச்சின் செயலாளர்கள், மேலதிக செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டு கலந்துரையாட திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்துவதற்கு தேவையான பின்னணியை உருவாக்கும் நோக்கில் இந்த சந்திப்புகள் நடத்தப்படுவதாக ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement