• Nov 22 2024

ரணிலுக்கு ஆதரவு...! தமிழ் கட்சிகளுடன் அரச தரப்பு பேச்சுவார்த்தை..!

Sharmi / Aug 5th 2024, 9:30 am
image

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 100 ஐ தாண்டிவிட்டதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர்கள் யாரென்ற விபரம் விரைவில் வெளிப்படுத்தப்படும் என்று அந்தத் தகவல் மேலும் கூறுகின்றது.

ரணிலுக்கான எம்.பிக்களின் ஆதரவைத் திரட்டும் பணியில் மும்முரமாக இடம்பெற்று வருகின்றது.

மொட்டு எம்.பிக்கள், ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிக்கள் எனப் பல்வேறு கட்சிகளின் எம்.பிக்களுடன் அரச தரப்பு பேச்சு நடத்தி வருகின்றது.

அதேவேளை, வடக்கு-கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்க் கட்சிகளுடனும் அரச தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.

இந்த நடவடிக்கையின் பயனாக பல எம்.பிக்கள் ரணிலின் பக்கம் சாய்ந்துள்ளனர் என்றும், 100 எம்.பிக்களுக்கு அதிகமானவர்கள் ரணிலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்றும் அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ரணிலுக்கு ஆதரவு. தமிழ் கட்சிகளுடன் அரச தரப்பு பேச்சுவார்த்தை. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 100 ஐ தாண்டிவிட்டதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.அவர்கள் யாரென்ற விபரம் விரைவில் வெளிப்படுத்தப்படும் என்று அந்தத் தகவல் மேலும் கூறுகின்றது.ரணிலுக்கான எம்.பிக்களின் ஆதரவைத் திரட்டும் பணியில் மும்முரமாக இடம்பெற்று வருகின்றது.மொட்டு எம்.பிக்கள், ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிக்கள் எனப் பல்வேறு கட்சிகளின் எம்.பிக்களுடன் அரச தரப்பு பேச்சு நடத்தி வருகின்றது.அதேவேளை, வடக்கு-கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்க் கட்சிகளுடனும் அரச தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.இந்த நடவடிக்கையின் பயனாக பல எம்.பிக்கள் ரணிலின் பக்கம் சாய்ந்துள்ளனர் என்றும், 100 எம்.பிக்களுக்கு அதிகமானவர்கள் ரணிலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்றும் அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement