• Jun 26 2024

பெரியவர்களால் சிறுவர்களிடையே பரவும் நோய் - பெற்றோருக்கு சுகாதார தரப்பினர் எச்சரிக்கை

Chithra / Jun 18th 2024, 10:21 am
image

Advertisement

 

சிறுவர்களிடையே பரவும் வைரஸ் காய்ச்சல் தொடர்பில் சுகாதார தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நாட்டில் தற்போது நிலவும் காலநிலை மாற்றம் காரணமாக சளி அதிகரித்து இருமல், வைரஸ் காய்ச்சல் மற்றும் ஏனைய தொற்று காய்ச்சல்கள் அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பெரியவர்கள் புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ள வீடுகளில் குழந்தைகளுக்கு ஆஸ்துமா மற்றும் சுவாசக் கோளாறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா எச்சரித்துள்ளார்.

சுவாச நோய்களுக்கான சிகிச்சையாக 'இன்ஹேலர்'களை பயன்படுத்த வைத்தியர்கள் பரிந்துரைத்தாலும், சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் அதற்கு அடிமையாகிவிடுமோ என அஞ்சுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


ஆனால் அது அவ்வாறு இல்லை என்றும், பெரியவர்கள் புகைப்பிடிக்கின்றமையே காரணம் என்றும் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா கூறியுள்ளார்.

இதனால் நாளாந்தம் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் வைத்தியசாலைகளின் அறிக்கைகள் தெரிவிக்கின்றது.


பெரியவர்களால் சிறுவர்களிடையே பரவும் நோய் - பெற்றோருக்கு சுகாதார தரப்பினர் எச்சரிக்கை  சிறுவர்களிடையே பரவும் வைரஸ் காய்ச்சல் தொடர்பில் சுகாதார தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.நாட்டில் தற்போது நிலவும் காலநிலை மாற்றம் காரணமாக சளி அதிகரித்து இருமல், வைரஸ் காய்ச்சல் மற்றும் ஏனைய தொற்று காய்ச்சல்கள் அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.பெரியவர்கள் புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ள வீடுகளில் குழந்தைகளுக்கு ஆஸ்துமா மற்றும் சுவாசக் கோளாறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா எச்சரித்துள்ளார்.சுவாச நோய்களுக்கான சிகிச்சையாக 'இன்ஹேலர்'களை பயன்படுத்த வைத்தியர்கள் பரிந்துரைத்தாலும், சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் அதற்கு அடிமையாகிவிடுமோ என அஞ்சுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.ஆனால் அது அவ்வாறு இல்லை என்றும், பெரியவர்கள் புகைப்பிடிக்கின்றமையே காரணம் என்றும் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா கூறியுள்ளார்.இதனால் நாளாந்தம் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் வைத்தியசாலைகளின் அறிக்கைகள் தெரிவிக்கின்றது.

Advertisement

Advertisement

Advertisement