• Nov 26 2026

அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் சுகாதாரத் துறையினர் – இன்று முக்கிய நடவடிக்கை!

Chithra / Nov 26th 2026, 10:47 am
image


வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக சுகாதாரத் துறையினர் எதிர்கொண்டுள்ள கொடுப்பனவுக் குறைப்பு மற்றும் நிதி நெருக்கடிகளுக்குத் தீர்வு கோரி, நிறைவுகாண் மருத்துவ மற்றும் துணை மருத்துவ சேவைகள் ஒன்றிணைந்த சம்மேளனம் இன்று (26)  அடையாள தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது.


இதன்படி, இன்று நண்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.


கடந்த 21ஆம் திகதி அரசாங்கத்திடம் கடிதம் ஒன்றைக் கையளித்து, தமது கோரிக்கைகள் தொடர்பில் தெளிவுபடுத்திய போதிலும், பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான சாதகமான நடவடிக்கைகள் எவையும் முன்னெடுக்கப்படவில்லை என சம்மேளனம் தெரிவித்துள்ளது.


சுகாதார அமைச்சுக்கான செலவுத் தலைப்பு மீதான வரவு செலவுத் திட்ட விவாதத்திற்கு முன்னதாக அரசாங்கம் தமது கோரிக்கைகளுக்குத் தீர்வை வழங்கும் என எதிர்பார்ப்பதாகவும் சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது.


அதேவேளை, பொதுமக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்துவது தமது நோக்கமல்ல என்றும், தமது பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காகவே இந்த அடையாள தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் சுகாதாரத் துறையினர் – இன்று முக்கிய நடவடிக்கை வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக சுகாதாரத் துறையினர் எதிர்கொண்டுள்ள கொடுப்பனவுக் குறைப்பு மற்றும் நிதி நெருக்கடிகளுக்குத் தீர்வு கோரி, நிறைவுகாண் மருத்துவ மற்றும் துணை மருத்துவ சேவைகள் ஒன்றிணைந்த சம்மேளனம் இன்று (26)  அடையாள தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது.இதன்படி, இன்று நண்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.கடந்த 21ஆம் திகதி அரசாங்கத்திடம் கடிதம் ஒன்றைக் கையளித்து, தமது கோரிக்கைகள் தொடர்பில் தெளிவுபடுத்திய போதிலும், பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான சாதகமான நடவடிக்கைகள் எவையும் முன்னெடுக்கப்படவில்லை என சம்மேளனம் தெரிவித்துள்ளது.சுகாதார அமைச்சுக்கான செலவுத் தலைப்பு மீதான வரவு செலவுத் திட்ட விவாதத்திற்கு முன்னதாக அரசாங்கம் தமது கோரிக்கைகளுக்குத் தீர்வை வழங்கும் என எதிர்பார்ப்பதாகவும் சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது.அதேவேளை, பொதுமக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்துவது தமது நோக்கமல்ல என்றும், தமது பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காகவே இந்த அடையாள தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement