சவுதி அரேபியாவின் வறண்ட பாலைவனப் பகுதியில், காற்றிலிருந்து ஈரப்பதத்தைச் சேகரித்து தண்ணீராக மாற்றும் சோதனைக் கருவியொன்று வெற்றிகரமாகச் செயற்பட்டுள்ளது.
சராசரியாக 12.4 சதவீதம் மட்டுமே ஈரப்பதம் காணப்பட்ட சூழலில், நுண்துளைகள் கொண்ட பிரத்யேகப் பொருளைப் பயன்படுத்தி இந்தக் கருவி காற்றிலிருந்து ஈரப்பதத்தை உறிஞ்சியுள்ளது.
பின்னர் இயற்கையான வெப்பத்தின் உதவியுடன் அந்த ஈரப்பதம் வெளியேற்றப்பட்டு தண்ணீராகச் சேகரிக்கப்பட்டுள்ளது.
கள ஆய்வின்போது மணல் புயல்கள் வீசிய நிலையிலும், இந்தச் சிறிய கருவி நாளொன்றுக்கு சுமார் 47 மில்லி லீற்றர் தண்ணீரை உற்பத்தி செய்துள்ளது.
எனினும், இந்த அளவு ஒரு வீட்டின் முழுமையான நீர்த் தேவையைப் பூர்த்தி செய்யப் போதுமானதல்ல. இருப்பினும், மிகக் குறைந்த ஈரப்பதம் கொண்ட வறண்ட பாலைவனச் சூழலில்கூட காற்றிலிருந்து தண்ணீரைப் பெற முடியும் என்பதை இந்தச் சோதனை வெளிப்படுத்தியுள்ளது.
காற்றிலிருந்தே குடிநீர் பெற முடியுமா சவுதி அரேபியாவின் வறண்ட பாலைவனப் பகுதியில், காற்றிலிருந்து ஈரப்பதத்தைச் சேகரித்து தண்ணீராக மாற்றும் சோதனைக் கருவியொன்று வெற்றிகரமாகச் செயற்பட்டுள்ளது.சராசரியாக 12.4 சதவீதம் மட்டுமே ஈரப்பதம் காணப்பட்ட சூழலில், நுண்துளைகள் கொண்ட பிரத்யேகப் பொருளைப் பயன்படுத்தி இந்தக் கருவி காற்றிலிருந்து ஈரப்பதத்தை உறிஞ்சியுள்ளது. பின்னர் இயற்கையான வெப்பத்தின் உதவியுடன் அந்த ஈரப்பதம் வெளியேற்றப்பட்டு தண்ணீராகச் சேகரிக்கப்பட்டுள்ளது.கள ஆய்வின்போது மணல் புயல்கள் வீசிய நிலையிலும், இந்தச் சிறிய கருவி நாளொன்றுக்கு சுமார் 47 மில்லி லீற்றர் தண்ணீரை உற்பத்தி செய்துள்ளது.எனினும், இந்த அளவு ஒரு வீட்டின் முழுமையான நீர்த் தேவையைப் பூர்த்தி செய்யப் போதுமானதல்ல. இருப்பினும், மிகக் குறைந்த ஈரப்பதம் கொண்ட வறண்ட பாலைவனச் சூழலில்கூட காற்றிலிருந்து தண்ணீரைப் பெற முடியும் என்பதை இந்தச் சோதனை வெளிப்படுத்தியுள்ளது.