• Nov 19 2024

நுவரெலியாவில் அதிக பனிமூட்டம் – சாரதிகள் மற்றும் மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

Chithra / Jul 18th 2024, 12:54 pm
image


நுவரெலியா மற்றும் அதனை சுற்றியுள்ள பல பகுதிகளில் அதிக பனிமூட்டம் காணப்படுவதால் பொது மக்கள் மற்றும் சாரதிகள் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ பிரிவு மற்றும் போக்குவரத்து பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நாட்களில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சாந்திபுர, மகஸ்தோட்டை, பட்டிபொல, கந்தபொல உட்பட பல பிரதேசங்களில் கடும் காற்றுடன் கடும் பனிமூட்டம் காணப்படுவதால் வீதிகளில் பயணிக்கும் போதும்,

வாகனங்களை பாவிக்கும் போதும் அவதானத்துடன் செயற்படுமாறு நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவம் அறிவித்துள்ளது. 

மேலும், நுவரெலியா பிரதேசத்திற்கு வருகை தரும் சாரதிகள் மற்றும் ஏனைய அனைத்து சாரதிகளும் பனிமூட்டமான பிரதேசங்களில் பயணிக்கும் போது உரிய ஒளி சமிக்ஞைகளை பயன்படுத்தி பாதுகாப்பான வேகத்தில் வாகனத்தை செலுத்துமாறு நுவரெலியா போக்குவரத்து பொலிஸார் மேலும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

வீதியின் இருபுறங்களிலும் மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழும் அபாயம் உள்ளதால் பாதசாரிகள் மற்றும் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.


நுவரெலியாவில் அதிக பனிமூட்டம் – சாரதிகள் மற்றும் மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை நுவரெலியா மற்றும் அதனை சுற்றியுள்ள பல பகுதிகளில் அதிக பனிமூட்டம் காணப்படுவதால் பொது மக்கள் மற்றும் சாரதிகள் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ பிரிவு மற்றும் போக்குவரத்து பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இந்த நாட்களில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சாந்திபுர, மகஸ்தோட்டை, பட்டிபொல, கந்தபொல உட்பட பல பிரதேசங்களில் கடும் காற்றுடன் கடும் பனிமூட்டம் காணப்படுவதால் வீதிகளில் பயணிக்கும் போதும்,வாகனங்களை பாவிக்கும் போதும் அவதானத்துடன் செயற்படுமாறு நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவம் அறிவித்துள்ளது. மேலும், நுவரெலியா பிரதேசத்திற்கு வருகை தரும் சாரதிகள் மற்றும் ஏனைய அனைத்து சாரதிகளும் பனிமூட்டமான பிரதேசங்களில் பயணிக்கும் போது உரிய ஒளி சமிக்ஞைகளை பயன்படுத்தி பாதுகாப்பான வேகத்தில் வாகனத்தை செலுத்துமாறு நுவரெலியா போக்குவரத்து பொலிஸார் மேலும் கேட்டுக்கொண்டுள்ளனர்.வீதியின் இருபுறங்களிலும் மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழும் அபாயம் உள்ளதால் பாதசாரிகள் மற்றும் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement