• May 17 2024

மட்டக்களப்பில் மீண்டும் கனமழை! வெள்ளத்தில் மூழ்கிய தாழ் நிலங்கள் - குளங்களின் நீர்மட்டங்களும் உயர்வு

Chithra / Jan 19th 2024, 11:14 am
image

Advertisement


மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவந்த மழை  கடந்த சில தினங்களாக ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் இன்று (19) அதிகாலை வேளையிலிருந்து  பலத்த மழை பொழியத் தொடங்கியுள்ளது.

கடந்தவாரம் முதல் பெய்துவந்த பலத்த மழை வீழ்ச்சியால் தேங்கியுள்ள வெள்ள நீர் வற்றாத நிலையில் தற்போது மழை பெய்யத் தொடங்கியுள்ளதனால் மீண்டும் வெள்ளநிலமை ஏற்பட்டுள்ளது.

மக்கள் குடியிருப்புக்களிலும், வீதிகளிலும், மீண்டும் மழைநீர் தேக்கமடைந்து வழிந்தோட முடியாத நிலமையையும் அவதானிக்க முடிகின்றது. 

இந்நிலையில் மழையுடன் ஓரளவு காற்றும் வீசிவருவதையும் அவதானிக்க முடிகின்றது.

இது இவ்வாறிருக்க மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள குளங்களின் நீர்மட்டங்களும்  உயர்ந்துள்ளதாக   நீர்ப்பாசனப் பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.


மட்டக்களப்பில் மீண்டும் கனமழை வெள்ளத்தில் மூழ்கிய தாழ் நிலங்கள் - குளங்களின் நீர்மட்டங்களும் உயர்வு மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவந்த மழை  கடந்த சில தினங்களாக ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் இன்று (19) அதிகாலை வேளையிலிருந்து  பலத்த மழை பொழியத் தொடங்கியுள்ளது.கடந்தவாரம் முதல் பெய்துவந்த பலத்த மழை வீழ்ச்சியால் தேங்கியுள்ள வெள்ள நீர் வற்றாத நிலையில் தற்போது மழை பெய்யத் தொடங்கியுள்ளதனால் மீண்டும் வெள்ளநிலமை ஏற்பட்டுள்ளது.மக்கள் குடியிருப்புக்களிலும், வீதிகளிலும், மீண்டும் மழைநீர் தேக்கமடைந்து வழிந்தோட முடியாத நிலமையையும் அவதானிக்க முடிகின்றது. இந்நிலையில் மழையுடன் ஓரளவு காற்றும் வீசிவருவதையும் அவதானிக்க முடிகின்றது.இது இவ்வாறிருக்க மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள குளங்களின் நீர்மட்டங்களும்  உயர்ந்துள்ளதாக   நீர்ப்பாசனப் பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement