மத்திய மலைநாட்டு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் தாக்கத்தால், நுவரெலியா மாவட்டம் மஸ்கெலியா பிரதேசத்தில் அமைந்துள்ள புரவுன்சீக் தோட்டத்தின் புளூம்பீல்ட் பிரிவில் உள்ள ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலய வளாகத்தின் சுற்று வட்ட கட்டிடம் சரிந்துள்ளது.
ஆர்.பி.கே. பிளான்டேசனுக்கு உட்பட்ட இப்பகுதியில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் பெய்து வரும் கடும் மழையால் நிலச்சரிவு அபாயம் அதிகரித்துள்ள நிலையில், ஆலய வளாகத்தில் இருந்த கட்டிடம் சேதமடைந்துள்ளது.
இந்த சம்பவத்தால், எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ள குடமுழுக்கு விழாவிற்கு இடையூறு ஏற்படக்கூடும் என ஆலய நிர்வாகம் கவலை வெளியிட்டுள்ளது.
இதனிடையே, சேதமடைந்த சுற்று கட்டிடத்தை மீள அமைப்பதற்காக நோர்வூட் பிரதேச செயலாளர், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், கலாச்சார அமைச்சு மற்றும் இந்து கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆகியவை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மஸ்கெலியாவில் கனமழை – குடமுழுக்கு காணவிருந்த ஆலய சுற்று கட்டடம் சரிவு மத்திய மலைநாட்டு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் தாக்கத்தால், நுவரெலியா மாவட்டம் மஸ்கெலியா பிரதேசத்தில் அமைந்துள்ள புரவுன்சீக் தோட்டத்தின் புளூம்பீல்ட் பிரிவில் உள்ள ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலய வளாகத்தின் சுற்று வட்ட கட்டிடம் சரிந்துள்ளது.ஆர்.பி.கே. பிளான்டேசனுக்கு உட்பட்ட இப்பகுதியில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் பெய்து வரும் கடும் மழையால் நிலச்சரிவு அபாயம் அதிகரித்துள்ள நிலையில், ஆலய வளாகத்தில் இருந்த கட்டிடம் சேதமடைந்துள்ளது.இந்த சம்பவத்தால், எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ள குடமுழுக்கு விழாவிற்கு இடையூறு ஏற்படக்கூடும் என ஆலய நிர்வாகம் கவலை வெளியிட்டுள்ளது.இதனிடையே, சேதமடைந்த சுற்று கட்டிடத்தை மீள அமைப்பதற்காக நோர்வூட் பிரதேச செயலாளர், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், கலாச்சார அமைச்சு மற்றும் இந்து கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆகியவை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.