• Nov 17 2024

இன்று நாட்டின் பல பகுதிகளிலும் கன மழை - மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் - விசேட அறிவித்தல்..!

Tamil nila / Mar 23rd 2024, 6:37 am
image

நாட்டின் பல பகுதிகளிலும் இன்றைய தினம் மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்படி, மேல், சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் வரை மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் சில பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அத்துடன், நேற்று இரவு 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் அம்பாறை – மகா ஓயா பகுதியிலேயே அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

133.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி குறித்த பகுதியில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் கல்முனை, அக்கரைப்பற்று, பொத்துவில் உள்ளிட்ட பகுதிகளிலும் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்தும் மழை பெய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நாட்டின் பல பகுதிகளிலும் கன மழை - மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் - விசேட அறிவித்தல். நாட்டின் பல பகுதிகளிலும் இன்றைய தினம் மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.இதன்படி, மேல், சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் வரை மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.நாட்டின் சில பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.அத்துடன், நேற்று இரவு 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் அம்பாறை – மகா ஓயா பகுதியிலேயே அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.133.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி குறித்த பகுதியில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் கல்முனை, அக்கரைப்பற்று, பொத்துவில் உள்ளிட்ட பகுதிகளிலும் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்தும் மழை பெய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement