• Nov 05 2026

பிணை கிடைத்தும் சிறையிலிருந்து வெளியேற முடியாத நிலையில் நாமல் ராஜபக்ஷ! – என்ன காரணம்?

Chithra / Nov 3rd 2026, 3:22 pm
image


கிரிஷ் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் பிணைக் கோரிக்கை தொடர்பில் இன்று (03) கொழும்பு நீதிமன்றத்தில் முக்கிய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.


தனது தாய், தந்தையர் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டுள்ளமையைச் சுட்டிக்காட்டி, அவரை பிணையில் விடுவிக்குமாறு சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.


எனினும், இந்தக் கோரிக்கைக்கு இலஞ்ச ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு எதிர்ப்புத் தெரிவித்திருந்தது.


இரு தரப்பு வாதங்களையும் ஆராய்ந்த கொழும்பு பிரதான நீதவான் அஸங்க எஸ். போதரகம, நாமல் ராஜபக்ஷவை பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.


இதற்கமைய, ஒரு இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணையும், தலா 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளும் விதிக்கப்பட்டுள்ளன. அத்துடன், வெளிநாட்டுப் பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.


கொழும்பு கோட்டை, டிரான்ஸ்வொர்க்ஸ் சதுக்கத்தில் (Transworks Square) உள்ள காணிகளைப் பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்திற்காக 'க்ரிஷ்' நிறுவனத்திற்குப் பரிமாற்றம் செய்வதற்கு வசதி செய்து கொடுத்தமைக்காக, 100 மில்லியன் ரூபாய் லஞ்சமாகப் பெற்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில் நாமல் ராஜபக்‌ஷ கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.


ஆனால், இங்குதான் முக்கியமான திருப்பம்!


மற்றுமொரு வழக்கில் அவருக்குப் பிணை கிடைக்காத காரணத்தினால், கிரிஷ் விவகாரத்தில் பிணை கிடைத்தும் நாமல் ராஜபக்ஷவால் சிறையிலிருந்து வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பிணை கிடைத்தும் சிறையிலிருந்து வெளியேற முடியாத நிலையில் நாமல் ராஜபக்ஷ – என்ன காரணம் கிரிஷ் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் பிணைக் கோரிக்கை தொடர்பில் இன்று (03) கொழும்பு நீதிமன்றத்தில் முக்கிய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.தனது தாய், தந்தையர் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டுள்ளமையைச் சுட்டிக்காட்டி, அவரை பிணையில் விடுவிக்குமாறு சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.எனினும், இந்தக் கோரிக்கைக்கு இலஞ்ச ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு எதிர்ப்புத் தெரிவித்திருந்தது.இரு தரப்பு வாதங்களையும் ஆராய்ந்த கொழும்பு பிரதான நீதவான் அஸங்க எஸ். போதரகம, நாமல் ராஜபக்ஷவை பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.இதற்கமைய, ஒரு இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணையும், தலா 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளும் விதிக்கப்பட்டுள்ளன. அத்துடன், வெளிநாட்டுப் பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.கொழும்பு கோட்டை, டிரான்ஸ்வொர்க்ஸ் சதுக்கத்தில் (Transworks Square) உள்ள காணிகளைப் பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்திற்காக 'க்ரிஷ்' நிறுவனத்திற்குப் பரிமாற்றம் செய்வதற்கு வசதி செய்து கொடுத்தமைக்காக, 100 மில்லியன் ரூபாய் லஞ்சமாகப் பெற்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில் நாமல் ராஜபக்‌ஷ கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.ஆனால், இங்குதான் முக்கியமான திருப்பம்மற்றுமொரு வழக்கில் அவருக்குப் பிணை கிடைக்காத காரணத்தினால், கிரிஷ் விவகாரத்தில் பிணை கிடைத்தும் நாமல் ராஜபக்ஷவால் சிறையிலிருந்து வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement