• Jan 28 2025

மீண்டும் கொட்டிய கனமழை; இரணைமடு குளத்தின் வான் கதவுகள் திறப்பு..!

Sharmi / Jan 15th 2025, 10:58 am
image

நிலவும் சீரற்ற காலநிலையினையடுத்து கிளிநொச்சி இரணைமடு குளத்தின் அனைத்து வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக, மாங்குளம், கனகராயன்குளம் ஆகிய பிரதேசங்களில் பெய்து வருகிற கனமழை காரணமாக அதிகளவான நீர் இரணைமடு குளத்துக்கு வந்து கொண்டிருக்கிறமையால் தற்போது 36 அடி 10.5 அங்குல அளவுகளை  தாண்டியுள்ளதுடன், குளத்தின் 10.5 அங்குலம் வான் பாய்ந்து கொண்டிருப்பதால் குளத்தின் அனைத்து கதவுகளும்  திறக்கப்பட்டு மேலதிக நீர் வெளியிடப்படுகின்றது.

எனவே, குளத்தின் கீழ்பகுதியில் வாழுகின்ற மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு  தெரிவித்துள்ளது. 

அதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகின்றமையால்  மாவட்டத்தில் உள்ள கனகாம்பிகைகுளம், வன்னேரி குளம், பிரமந்தனாறு குளம் ஆகியன வான் பாய ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.



மீண்டும் கொட்டிய கனமழை; இரணைமடு குளத்தின் வான் கதவுகள் திறப்பு. நிலவும் சீரற்ற காலநிலையினையடுத்து கிளிநொச்சி இரணைமடு குளத்தின் அனைத்து வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறிப்பாக, மாங்குளம், கனகராயன்குளம் ஆகிய பிரதேசங்களில் பெய்து வருகிற கனமழை காரணமாக அதிகளவான நீர் இரணைமடு குளத்துக்கு வந்து கொண்டிருக்கிறமையால் தற்போது 36 அடி 10.5 அங்குல அளவுகளை  தாண்டியுள்ளதுடன், குளத்தின் 10.5 அங்குலம் வான் பாய்ந்து கொண்டிருப்பதால் குளத்தின் அனைத்து கதவுகளும்  திறக்கப்பட்டு மேலதிக நீர் வெளியிடப்படுகின்றது.எனவே, குளத்தின் கீழ்பகுதியில் வாழுகின்ற மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு  தெரிவித்துள்ளது. அதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகின்றமையால்  மாவட்டத்தில் உள்ள கனகாம்பிகைகுளம், வன்னேரி குளம், பிரமந்தனாறு குளம் ஆகியன வான் பாய ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now