• May 05 2024

இலங்கையில் தொடரும் கனமழை..! இருவர் பலி..! 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட அபாய எச்சரிக்கை

Chithra / Jan 12th 2024, 11:27 am
image

Advertisement

 


நாட்டில் தொடரும் கடும் மழையுடனான சீரற்ற காலநிலையால் 13 மாவட்டங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 09 ஆயிரத்து 635 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் நேற்று (11) வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நாட்டில் தொடர்ந்து பெய்துவரும் கடும் மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவால்,

பதுளை, மொனராகலை, நுவரெலியா, கண்டி, இரத்தினபுரி, கேகாலை, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, ஹம்பாந்தோட்டை, முல்லைத்தீவு, குருநாகல் மற்றும் புத்தளம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் 33 ஆயிரத்து 687 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 09 ஆயிரத்து 635 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, வெள்ளம் மற்றும் மண்சரிவு, மரம் முறிந்து விழுதல் உள்ளிட்ட அனர்த்தங்களால் இருவர் உயிரிழந்துள்ளனர். 

06 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் 318 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட ஆயிரத்து 587 குடும்பங்களைச் சேர்ந்த 4ஆயிரத்து 981 பேர் நாடு முழுவதிலுமுள்ள 31 இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதேவளை,  பதுளை, காலி, கண்டி, களுத்துறை, மாத்தளை, மாத்தறை, மொனராகலை, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி உள்ளிட்ட 10 மாவட்டங்களிலுள்ள 28 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேற்படி மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள இடங்களைச் சேர்ந்த மக்கள் அவதானத்துடள் செயற்படுமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

இலங்கையில் தொடரும் கனமழை. இருவர் பலி. 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட அபாய எச்சரிக்கை  நாட்டில் தொடரும் கடும் மழையுடனான சீரற்ற காலநிலையால் 13 மாவட்டங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 09 ஆயிரத்து 635 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதுகுறித்து அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் நேற்று (11) வெளியிட்டுள்ள அறிக்கையில்,நாட்டில் தொடர்ந்து பெய்துவரும் கடும் மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவால்,பதுளை, மொனராகலை, நுவரெலியா, கண்டி, இரத்தினபுரி, கேகாலை, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, ஹம்பாந்தோட்டை, முல்லைத்தீவு, குருநாகல் மற்றும் புத்தளம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் 33 ஆயிரத்து 687 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 09 ஆயிரத்து 635 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதேவேளை, வெள்ளம் மற்றும் மண்சரிவு, மரம் முறிந்து விழுதல் உள்ளிட்ட அனர்த்தங்களால் இருவர் உயிரிழந்துள்ளனர். 06 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் 318 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட ஆயிரத்து 587 குடும்பங்களைச் சேர்ந்த 4ஆயிரத்து 981 பேர் நாடு முழுவதிலுமுள்ள 31 இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.இதேவளை,  பதுளை, காலி, கண்டி, களுத்துறை, மாத்தளை, மாத்தறை, மொனராகலை, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி உள்ளிட்ட 10 மாவட்டங்களிலுள்ள 28 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேற்படி மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள இடங்களைச் சேர்ந்த மக்கள் அவதானத்துடள் செயற்படுமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement