• Nov 23 2024

மன்னாரில் கொட்டி தீர்த்த கனமழை; மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிதம்..!

Sharmi / Oct 24th 2024, 12:30 pm
image

மன்னார் மாவட்டத்தில் நேற்று(23) இரவு முதல் இன்று(24) காலை வரை பெய்த தொடர் மழை காரணமாக மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

குறிப்பாக மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சாந்திபுரம் ,சௌதார், எழுத்தூர் ,மூர் வீதி உள்ளடங்கலாக பல கிராமங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

மேலும் எழுத்தூர் பகுதியில் உள்ள 30 குடும்பங்களின் வீடுகளுக்குள் நீர் புகுந்ததன் காரணமாக முப்பது குடும்பங்களும் தற்போது எழுத்தூர் பாடசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

அதேவேளை, மாவட்டத்தின் பல பாகங்களிலும் தேங்கியுள்ள வெள்ள நீரை வெளியேற்றும் நடவடிக்கைகளில் கிராம மக்கள் இறங்கியுள்ளனர்.

அத்துடன், அங்குள்ள பல வீடுகளில் வெள்ள நீர் புகுந்த நிலையில் அப் பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மன்னார் பிரதேச செயலாளர் எம்.பிரதீப் தலைமையிலான குழுவினர் குறித்த பகுதிக்குச் சென்று துரித நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும்,  மன்னார் மாவட்டத்தில்  அனர்த்தம் சம்பந்தமாக உடனடியாக மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவு, பிரதேச செயலகம் அல்லது கிராம அலுவலகர்களின் கவனத்திற்கு கொண்டு வருமாறு மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.


மன்னாரில் கொட்டி தீர்த்த கனமழை; மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிதம். மன்னார் மாவட்டத்தில் நேற்று(23) இரவு முதல் இன்று(24) காலை வரை பெய்த தொடர் மழை காரணமாக மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.குறிப்பாக மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சாந்திபுரம் ,சௌதார், எழுத்தூர் ,மூர் வீதி உள்ளடங்கலாக பல கிராமங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.மேலும் எழுத்தூர் பகுதியில் உள்ள 30 குடும்பங்களின் வீடுகளுக்குள் நீர் புகுந்ததன் காரணமாக முப்பது குடும்பங்களும் தற்போது எழுத்தூர் பாடசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.அதேவேளை, மாவட்டத்தின் பல பாகங்களிலும் தேங்கியுள்ள வெள்ள நீரை வெளியேற்றும் நடவடிக்கைகளில் கிராம மக்கள் இறங்கியுள்ளனர்.அத்துடன், அங்குள்ள பல வீடுகளில் வெள்ள நீர் புகுந்த நிலையில் அப் பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.மன்னார் பிரதேச செயலாளர் எம்.பிரதீப் தலைமையிலான குழுவினர் குறித்த பகுதிக்குச் சென்று துரித நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.மேலும்,  மன்னார் மாவட்டத்தில்  அனர்த்தம் சம்பந்தமாக உடனடியாக மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவு, பிரதேச செயலகம் அல்லது கிராம அலுவலகர்களின் கவனத்திற்கு கொண்டு வருமாறு மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement