திருகோணமலையில் மிக நீண்ட நாட்களின் பின்பு அடை மழை பெய்து வருகின்றது.
தற்போது நெல் அறுவடை இடம் பெற்று வரும் நிலையில் கனமழை காரணமாக நெல் அறுவடை தடைப்பட்டுள்ளதுடன் மக்களின் இயல்பு நிலை பாதிப்படைந்துள்ளது.
திருகோணமலையின் கிண்ணியா,தம்பலகாமம்,கந்தளாய் உள்ளிட்ட பல இடங்களிலும் மழை பெய்து வருகின்றது.
இதனால் அன்றாட ஜீவனோபாயம் பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் மூன்று மணித்தியாலங்கள் கடந்த நிலையில் அடை மழை பெய்து வருகின்றது.
தாழ் நிலப் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதுடன் நெற் செய்கை அறுவடை இயந்திரம் மூலமாக இடம்பெற்று வரும் நிலையில் நெல் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசெம்பர் மாதம் ஏற்பட்ட டித்வா புயலால் விவசாயிகள் பெரும் பாதிப்பை எதிர்கொண்ட நிலையில் தற்போதும் நெல் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
திருகோணமலையில் கொட்டும் கனமழை; நெல் அறுவடை பாதிப்பு கவலையில் விவசாயிகள் திருகோணமலையில் மிக நீண்ட நாட்களின் பின்பு அடை மழை பெய்து வருகின்றது. தற்போது நெல் அறுவடை இடம் பெற்று வரும் நிலையில் கனமழை காரணமாக நெல் அறுவடை தடைப்பட்டுள்ளதுடன் மக்களின் இயல்பு நிலை பாதிப்படைந்துள்ளது.திருகோணமலையின் கிண்ணியா,தம்பலகாமம்,கந்தளாய் உள்ளிட்ட பல இடங்களிலும் மழை பெய்து வருகின்றது.இதனால் அன்றாட ஜீவனோபாயம் பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் மூன்று மணித்தியாலங்கள் கடந்த நிலையில் அடை மழை பெய்து வருகின்றது. தாழ் நிலப் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதுடன் நெற் செய்கை அறுவடை இயந்திரம் மூலமாக இடம்பெற்று வரும் நிலையில் நெல் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது.கடந்த டிசெம்பர் மாதம் ஏற்பட்ட டித்வா புயலால் விவசாயிகள் பெரும் பாதிப்பை எதிர்கொண்ட நிலையில் தற்போதும் நெல் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.