முல்லைத்தீவு நகரை சுற்றி உலங்கு வானூர்தி மூலம் இலங்கை விமான படையினர் கண்காணிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது.
ஒவ்வொரு வருடமும் தமிழின அழிப்பு நாளான மே மாதம் 18 ஆம் திகதி யுத்தத்தின் போது கொல்லப்பட்ட மக்களை, மக்கள் நினைவு கூருகின்றனர்.
ஒவ்வொரு வருடமும் இராணுவம், பொலிஸாரின் கெடுபிடிகளுக்கு மத்தியிலேயே அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறுவது வழக்கமானதாகும்.
இந்நிலையில் இவ்வருடம் மே மாதம் முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் ஆரம்பமாகியிருக்கும் நிலையில்,
என்றும் இல்லாதவாறு கடந்த இரு தினங்களாக உலங்கு வானூர்தி வானை சுற்றி நோட்டமிட்ட வண்ணம் உள்ளதாக தெரியவருகின்றது.
ஆகவே இவ்வருடமும் அஞ்சலி நிகழ்வு கெடுபிடிகளுக்குள் தானா? என்ற ஐயமும் மக்கள் மத்தியில் தோன்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவு நகரை சுற்றி நோட்டமிட்ட உலங்கு வானூர்தி இந்த ஆண்டும் அஞ்சலி நிகழ்வு கெடுபிடிகளுக்குள் தானா. முல்லைத்தீவு நகரை சுற்றி உலங்கு வானூர்தி மூலம் இலங்கை விமான படையினர் கண்காணிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது.ஒவ்வொரு வருடமும் தமிழின அழிப்பு நாளான மே மாதம் 18 ஆம் திகதி யுத்தத்தின் போது கொல்லப்பட்ட மக்களை, மக்கள் நினைவு கூருகின்றனர். ஒவ்வொரு வருடமும் இராணுவம், பொலிஸாரின் கெடுபிடிகளுக்கு மத்தியிலேயே அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறுவது வழக்கமானதாகும்.இந்நிலையில் இவ்வருடம் மே மாதம் முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் ஆரம்பமாகியிருக்கும் நிலையில்,என்றும் இல்லாதவாறு கடந்த இரு தினங்களாக உலங்கு வானூர்தி வானை சுற்றி நோட்டமிட்ட வண்ணம் உள்ளதாக தெரியவருகின்றது. ஆகவே இவ்வருடமும் அஞ்சலி நிகழ்வு கெடுபிடிகளுக்குள் தானா என்ற ஐயமும் மக்கள் மத்தியில் தோன்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.