வடக்கில் மலையக மக்களை குடியேற்றி அவர்களையும் சமூகத்தில் அனைத்து உரிமைகளுடன் வாழ வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்க மூத்த போராளி பசீர் காக்கா அதற்காக உரிய பொளிமுறை வகுக்கப்படுவது அவசியம் என்றும் சுட்டிக்காடினார்.
யாழ் ஊடக அமையத்தில் இந்து ஊடக சந்திப்பை முன்னெடுத்த அவர் மேலும் கூறுகையில் -
இயற்கை அனர்த்தத்தால் பாதுகாப்பற்ற இடங்களில் வாழ்ந்த மலையக மக்களுக்கு நேர்ந்த அவல நிலை எம்மெல்லோரையும் துயரத்தில் ஆழ்த்தியது.
தமது உழைப்புக்கோ, வாழ்வாதாரத்துக்கோ உரிய கூலியைப் பெற முடியாத நிலையிலும் சுனாமிப் பேரிடரின் போது வடகிழக்குக்கு ஓடோடி வந்து தங்களாலான உணவு, உடை, நிதியை வழங்கி பாதிப்புற்ற எமது உறவுகளுக்கு உதவிய மலையக மக்களுக்கு என்றென்றும் நாம் கடமைப்பட்டுள்ளோம்.
அந்த வகையில் சுமார் ஐந்து தலைமுறையினராக சொந்தப் பெயரில் நிலமில்லாது வாழும் இந்த உறவுகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்து கொடுக்க வேண்டியது மானுடத்தை நேசிக்கும் எம் அனைவருக்கும் உள்ள கடமையாகும்.
எவ்வாறாயினும் தாங்கள் எங்கு வாழவேண்டியவர்கள் என்பதைத் தீர்மானிப்பது சம்பந்தப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தினரதும் உரிமையாகும். ஆரம்பத்தில் இனக்கலவரத்தை தொடர்ந்து கிளிநொச்சி தருமபுரத்தில் குடியமர்ந்த முன்னாள் மலையக மக்கள் இன்று எப்படியோ காணி உரிமையாளராகி விட்டனர்.
பின்னர் குடியமர வந்தோரும் தொண்டைமான் நகர், செல்வாநகர், மலையாளபுரம் முதலான பகுதிகளில் காணி உரிமையாளர்களாகி வீட்டுத்திட்டம் போன்றவற்றைப் பெற்றனர். குடாநாட்டைப் பொறுத்தவரை முன்னர் சிதம்பரம், யாழ்ப்பாணம் சிவன்கோயில் போன்றவற்றுக்கு காணி மற்றும் வயல் நிலங்களை தானமாக வழங்கினர்.
செஞ்சோலைக்கென பணம் கொடுத்து வாங்கிய காணிகளைவிட நல்மனது கொண்ட ஒருவர் இரணைமடுவில் இருந்த தனது பதினாறு ஏக்கர் காணியை இந்த அமைப்புக்கென வழங்கினார். குருகுலம் என்ற அமைப்பைத் தொடங்கிய அப்புஜி என்றழைக்கப்படும் கதிரவேலு என்ற உத்தமர் பலஏக்கர் நிலத்தை மலையக மக்களின் வாழ்விடத்துக்கென வழங்கினார்.
இத்தொண்டு நிறுவனத்தையும் மகாதேவா ஆச்சிரமத்தையும் பின்னர் வழிநடத்திய முன்னாள் கிளிநொச்சி அரசாங்க அதிபர் திருநாவுக்கரசு இராசநாயகம் அவர்கள் மீதிருந்த நன்நம்பிக்கை காரணமாக இப்போதும் பலர் தமது காணிகளை, வீடுகளை வழங்கி வருகின்றனர்.
தெல்லிப்பளை துர்க்கா இல்லத்தில் வளர்ந்த பெண் பிள்ளைகளுக்கு தேவையைப் பொறுத்து காணி, வீடு மட்டுமல்ல சீதனமும் வழங்கித் திருமணம் செய்து வைக்கிறார் ஆறு.திருமுருகன்.இதற்கெனப் புலம் பெயர் தேசங்களிலும், உள்ளூரிலும் உள்ள ஈகையாளர்கள் அவருக்குப் பக்கபலமாக இருந்து உதவி வருகின்றார்கள். இவற்றைப் போல பல முன்னுதாரனங்களைச் சுட்டிக்காட்டலாம்.
இன்று மலையக மக்களுக்குத் தேவையானவை சொந்தப் பெயரிலான காணிகள் மட்டுமல்ல பாதுகாப்பான கௌரவமான தொழில், பிள்ளைகனில் கல்வியைத் தொடர்வதற்கான ஏற்பாடுகளும்தான். இந்த மூன்று விடயங்களையும் கருத்திற்கொண்டு அரசியல்வாதிகள் அல்லாத பொது நலனை முதன்மைப்படுத்தித் திட்டமிட்டுச் செயற்படுத்தும் ஆற்றல் மிக்கோரால் நடத்தப்படும் ஒரு அமைப்புத்தான்.
குறிப்பாக இதன் தலைவராக வெளிப்படுத்தப்படுபவர்மீது மக்களுக்குப் பெரும் நம்பிக்கை இருக்க வேண்டும். புலம்பெயர் தேசங்களிலும் உள்நாட்டிலும் இவ்வாறு நம்பிக்கைக்குரியவராக முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி ம.இளஞ்செழியன் அவர்களே விளங்குகின்றார்.
மேலும் ஏனைய இனத்தவர்களின் மதிப்பிற்குரியவராகவும் அவர் இருப்பதை உணரமுடிகிறது. இவர் தலைமை வகித்தால் அந்த அமைப்புக்கு தமது காணி, வீடுகளை வழங்கவோ எதிர்பார்க்கும் வேறு வகைகளிலோ உதவுவதற்கோ எந்தத் தயக்கமும் இல்லை எமது மக்களுக்கு. இதனை இந்த மண்ணில் தொடர்ச்சியாக வாழ்ந்து மக்களின் மனநிலைகளை அறிந்த பின்னரே அறுதியிட்டுக் கூறுகிறோம்.
ஏற்கெனவே சுனாமிக் கட்டமைப்புக்கு நேர்ந்த கதி என்ன என்பதைக் கருத்திற் கொண்டும் நாம் சில விடயங்களை முன்னெடுக்க வேண்டியுள்ளது. அந்த வகையில் அரச கட்டமைப்புக்களின் ஒத்துழைப்பும் இதற்கு வேண்டும். காணி ஒதுக்கீடு மட்டுமல்ல தொழிலுக்கான உத்தரவாதமும் வேண்டும்.
பரந்தன் இராசாயனத் தொழிற்சாலையை மீளவும் ஆரம்பிக்கவுள்ளதாக அரசு கூறுவதில் உண்மை இருக்குமானால் அதில் சாத்தியமானளவுக்கு மலையக மக்களுக்கு வாய்ப்பளிக்கலாம். குறிஞ்சாத்தீவு உப்பளத்தையும் மீளவும் ஆரம்பிக்க அரசோ தனியார் நிறுவனங்களோ முயற்சிக்கலாம். ஆனையிறவு உப்பை அம்பாந்தோட்டைக்குக் கொண்டு சென்று பொதியிடுவதைத் தவிர்த்து இங்கேயே அதனை செய்யலாம்.
பெருந்தோட்டங்களை வைத்திருப்போர் ஒரு குடும்பத்திற்குத் தேவையான சிறுபகுதிக்காணியை உறுதியுடன் வழங்கினால் தொடர்ச்சியாக வேலை செய்வதற்கு ஆள் கிடைக்கும். இதைப்போல இப் பகுதியிலுள்ள தனியார் நிறுவனங்களும் சாத்தியமான அளவு முயற்சிக்கலாம்.
பச்சிலைப்பள்ளி மற்றும் கண்டாவளைப் பிரதேச செயலர் பிரிவுகளிலும், முல்லைத்தீவின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவிலுள்ள முறிகண்டி போன்ற இடங்களிலும் இம்மக்களைக் குடியேற்ற எந்த வகையில் உதவி செய்ய முடியும் என வடக்கு ஆளுநர், மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு அரச அதிபர்களுடன் தொடர்பு கொள்ள முயற்சிக்கலாம்.
தீவுப்பகுதிகளில் எந்தத் தொழில்முயற்சிகளை ஆரம்பிக்கலாம் எனவும் யார் யார் மலையக மக்களுக்கு காணிகள், வீடுகளை வழங்கத் தயாராக உள்ளீர்கள் என்றும் புலம்பெயர்ந்தோரிடமும் உரையாடலாம். முதலில் கிளிநொச்சியில் உள்ள தனியார் நிறுவனங்கள், பண்னைகள் இம் முயற்சியினைத் தொடங்கலாம்.
இதே வேளை மாணவர்களின் கல்வி தொய்வில்லாமல் தொடர என்னென்ன வகையில் உதவ முடியும் எனவும் ஆராய வேண்டியுள்ளது. காணி உரிமையாளர்களுக்கு வீடமைப்புக்கான அரச நிதி கிடைத்து வேலைகள் பூர்த்தியாகும் வரை வாழ்வாதாரத்துக்கான உதவிக்கொடுப்பனவுக்கு ஏற்பாடு செய்ய வேண்டி தேவை எமக்கு உண்டு. புலம்பெயர் உறவுகள் இவ் விடயத்தைக் கவனத்திற்கொள்ளவும்.
ஏற்கனவே பலருடன் உரையாடிய பின்பே இந்த வேண்டுகோள் விடுக்கப்படுகின்றது. எனவே இனத்துக்காகவும் மனிதாபிமானத்தை வெளிப்படுத்தவும் பாடுபடும் சக்திகள் இப்பொறுப்பினை ஏற்க வேண்டுமென மான்புமிகு நீதியரசர் இளஞ்செழியன் அவர்களிடம் விநயமாக வேண்டிக் கொள்வீர்கள் என எதிர்பார்க்கிறோம். தனது வாழ்வில் அரச நிர்வாகத்திலும், கல்வி அமைப்பிலும், வைத்திய துறையிலும் என பல்வேறு ஆற்றல் மிக்க நேர்மையானவர்களை அவர் இனம் கண்டுகொண்டிருப்பார்.
அவ்வாறானவர்களை இணைத்துக் கொண்டால் மலையக மக்களுக்கும் அவரது சேவை கிடைக்கும். இதில் நன்நோக்கமே முதன்மையானது. எந்த சிக்கலையும் சவாலையும் எதிர்கொள்ள இறைவன் துணை நிற்பார். குறிப்பிட்ட காலத்துக்குள் இது தொடர்பான முழுமையான வேலைத்திட்டம் உருவாக்கப்பட வேண்டும். முகாம்களில் வாழும் நிலை தொடர்ந்தால் சமூக அமைப்புக்கும் எமது சந்ததியினருக்கும் பாதகமான சூழல் உருவாகி விடும்.
இந்நிலையில் இம் மக்களின் நம்பிக்கையினைச் சீர்குலைக்கும் வகையில் அரசியல் வாதிகளோ நவீன ஊடகவியலாளர்களோ செயற்படக் கூடாதென இறைவனை வேண்டிக் கொள்வோம் என தெரிவித்தார்.
சிறந்த பொறிமுறையுடன் வடக்கில் மலையக மக்களை குடியேற்ற முடியும் - மூத்த போராளி பசீர் காக்கா ஆலோசனை வடக்கில் மலையக மக்களை குடியேற்றி அவர்களையும் சமூகத்தில் அனைத்து உரிமைகளுடன் வாழ வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்க மூத்த போராளி பசீர் காக்கா அதற்காக உரிய பொளிமுறை வகுக்கப்படுவது அவசியம் என்றும் சுட்டிக்காடினார்.யாழ் ஊடக அமையத்தில் இந்து ஊடக சந்திப்பை முன்னெடுத்த அவர் மேலும் கூறுகையில் -இயற்கை அனர்த்தத்தால் பாதுகாப்பற்ற இடங்களில் வாழ்ந்த மலையக மக்களுக்கு நேர்ந்த அவல நிலை எம்மெல்லோரையும் துயரத்தில் ஆழ்த்தியது.தமது உழைப்புக்கோ, வாழ்வாதாரத்துக்கோ உரிய கூலியைப் பெற முடியாத நிலையிலும் சுனாமிப் பேரிடரின் போது வடகிழக்குக்கு ஓடோடி வந்து தங்களாலான உணவு, உடை, நிதியை வழங்கி பாதிப்புற்ற எமது உறவுகளுக்கு உதவிய மலையக மக்களுக்கு என்றென்றும் நாம் கடமைப்பட்டுள்ளோம். அந்த வகையில் சுமார் ஐந்து தலைமுறையினராக சொந்தப் பெயரில் நிலமில்லாது வாழும் இந்த உறவுகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்து கொடுக்க வேண்டியது மானுடத்தை நேசிக்கும் எம் அனைவருக்கும் உள்ள கடமையாகும்.எவ்வாறாயினும் தாங்கள் எங்கு வாழவேண்டியவர்கள் என்பதைத் தீர்மானிப்பது சம்பந்தப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தினரதும் உரிமையாகும். ஆரம்பத்தில் இனக்கலவரத்தை தொடர்ந்து கிளிநொச்சி தருமபுரத்தில் குடியமர்ந்த முன்னாள் மலையக மக்கள் இன்று எப்படியோ காணி உரிமையாளராகி விட்டனர்.பின்னர் குடியமர வந்தோரும் தொண்டைமான் நகர், செல்வாநகர், மலையாளபுரம் முதலான பகுதிகளில் காணி உரிமையாளர்களாகி வீட்டுத்திட்டம் போன்றவற்றைப் பெற்றனர். குடாநாட்டைப் பொறுத்தவரை முன்னர் சிதம்பரம், யாழ்ப்பாணம் சிவன்கோயில் போன்றவற்றுக்கு காணி மற்றும் வயல் நிலங்களை தானமாக வழங்கினர்.செஞ்சோலைக்கென பணம் கொடுத்து வாங்கிய காணிகளைவிட நல்மனது கொண்ட ஒருவர் இரணைமடுவில் இருந்த தனது பதினாறு ஏக்கர் காணியை இந்த அமைப்புக்கென வழங்கினார். குருகுலம் என்ற அமைப்பைத் தொடங்கிய அப்புஜி என்றழைக்கப்படும் கதிரவேலு என்ற உத்தமர் பலஏக்கர் நிலத்தை மலையக மக்களின் வாழ்விடத்துக்கென வழங்கினார். இத்தொண்டு நிறுவனத்தையும் மகாதேவா ஆச்சிரமத்தையும் பின்னர் வழிநடத்திய முன்னாள் கிளிநொச்சி அரசாங்க அதிபர் திருநாவுக்கரசு இராசநாயகம் அவர்கள் மீதிருந்த நன்நம்பிக்கை காரணமாக இப்போதும் பலர் தமது காணிகளை, வீடுகளை வழங்கி வருகின்றனர்.தெல்லிப்பளை துர்க்கா இல்லத்தில் வளர்ந்த பெண் பிள்ளைகளுக்கு தேவையைப் பொறுத்து காணி, வீடு மட்டுமல்ல சீதனமும் வழங்கித் திருமணம் செய்து வைக்கிறார் ஆறு.திருமுருகன்.இதற்கெனப் புலம் பெயர் தேசங்களிலும், உள்ளூரிலும் உள்ள ஈகையாளர்கள் அவருக்குப் பக்கபலமாக இருந்து உதவி வருகின்றார்கள். இவற்றைப் போல பல முன்னுதாரனங்களைச் சுட்டிக்காட்டலாம்.இன்று மலையக மக்களுக்குத் தேவையானவை சொந்தப் பெயரிலான காணிகள் மட்டுமல்ல பாதுகாப்பான கௌரவமான தொழில், பிள்ளைகனில் கல்வியைத் தொடர்வதற்கான ஏற்பாடுகளும்தான். இந்த மூன்று விடயங்களையும் கருத்திற்கொண்டு அரசியல்வாதிகள் அல்லாத பொது நலனை முதன்மைப்படுத்தித் திட்டமிட்டுச் செயற்படுத்தும் ஆற்றல் மிக்கோரால் நடத்தப்படும் ஒரு அமைப்புத்தான். குறிப்பாக இதன் தலைவராக வெளிப்படுத்தப்படுபவர்மீது மக்களுக்குப் பெரும் நம்பிக்கை இருக்க வேண்டும். புலம்பெயர் தேசங்களிலும் உள்நாட்டிலும் இவ்வாறு நம்பிக்கைக்குரியவராக முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி ம.இளஞ்செழியன் அவர்களே விளங்குகின்றார். மேலும் ஏனைய இனத்தவர்களின் மதிப்பிற்குரியவராகவும் அவர் இருப்பதை உணரமுடிகிறது. இவர் தலைமை வகித்தால் அந்த அமைப்புக்கு தமது காணி, வீடுகளை வழங்கவோ எதிர்பார்க்கும் வேறு வகைகளிலோ உதவுவதற்கோ எந்தத் தயக்கமும் இல்லை எமது மக்களுக்கு. இதனை இந்த மண்ணில் தொடர்ச்சியாக வாழ்ந்து மக்களின் மனநிலைகளை அறிந்த பின்னரே அறுதியிட்டுக் கூறுகிறோம்.ஏற்கெனவே சுனாமிக் கட்டமைப்புக்கு நேர்ந்த கதி என்ன என்பதைக் கருத்திற் கொண்டும் நாம் சில விடயங்களை முன்னெடுக்க வேண்டியுள்ளது. அந்த வகையில் அரச கட்டமைப்புக்களின் ஒத்துழைப்பும் இதற்கு வேண்டும். காணி ஒதுக்கீடு மட்டுமல்ல தொழிலுக்கான உத்தரவாதமும் வேண்டும்.பரந்தன் இராசாயனத் தொழிற்சாலையை மீளவும் ஆரம்பிக்கவுள்ளதாக அரசு கூறுவதில் உண்மை இருக்குமானால் அதில் சாத்தியமானளவுக்கு மலையக மக்களுக்கு வாய்ப்பளிக்கலாம். குறிஞ்சாத்தீவு உப்பளத்தையும் மீளவும் ஆரம்பிக்க அரசோ தனியார் நிறுவனங்களோ முயற்சிக்கலாம். ஆனையிறவு உப்பை அம்பாந்தோட்டைக்குக் கொண்டு சென்று பொதியிடுவதைத் தவிர்த்து இங்கேயே அதனை செய்யலாம்.பெருந்தோட்டங்களை வைத்திருப்போர் ஒரு குடும்பத்திற்குத் தேவையான சிறுபகுதிக்காணியை உறுதியுடன் வழங்கினால் தொடர்ச்சியாக வேலை செய்வதற்கு ஆள் கிடைக்கும். இதைப்போல இப் பகுதியிலுள்ள தனியார் நிறுவனங்களும் சாத்தியமான அளவு முயற்சிக்கலாம்.பச்சிலைப்பள்ளி மற்றும் கண்டாவளைப் பிரதேச செயலர் பிரிவுகளிலும், முல்லைத்தீவின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவிலுள்ள முறிகண்டி போன்ற இடங்களிலும் இம்மக்களைக் குடியேற்ற எந்த வகையில் உதவி செய்ய முடியும் என வடக்கு ஆளுநர், மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு அரச அதிபர்களுடன் தொடர்பு கொள்ள முயற்சிக்கலாம்.தீவுப்பகுதிகளில் எந்தத் தொழில்முயற்சிகளை ஆரம்பிக்கலாம் எனவும் யார் யார் மலையக மக்களுக்கு காணிகள், வீடுகளை வழங்கத் தயாராக உள்ளீர்கள் என்றும் புலம்பெயர்ந்தோரிடமும் உரையாடலாம். முதலில் கிளிநொச்சியில் உள்ள தனியார் நிறுவனங்கள், பண்னைகள் இம் முயற்சியினைத் தொடங்கலாம். இதே வேளை மாணவர்களின் கல்வி தொய்வில்லாமல் தொடர என்னென்ன வகையில் உதவ முடியும் எனவும் ஆராய வேண்டியுள்ளது. காணி உரிமையாளர்களுக்கு வீடமைப்புக்கான அரச நிதி கிடைத்து வேலைகள் பூர்த்தியாகும் வரை வாழ்வாதாரத்துக்கான உதவிக்கொடுப்பனவுக்கு ஏற்பாடு செய்ய வேண்டி தேவை எமக்கு உண்டு. புலம்பெயர் உறவுகள் இவ் விடயத்தைக் கவனத்திற்கொள்ளவும்.ஏற்கனவே பலருடன் உரையாடிய பின்பே இந்த வேண்டுகோள் விடுக்கப்படுகின்றது. எனவே இனத்துக்காகவும் மனிதாபிமானத்தை வெளிப்படுத்தவும் பாடுபடும் சக்திகள் இப்பொறுப்பினை ஏற்க வேண்டுமென மான்புமிகு நீதியரசர் இளஞ்செழியன் அவர்களிடம் விநயமாக வேண்டிக் கொள்வீர்கள் என எதிர்பார்க்கிறோம். தனது வாழ்வில் அரச நிர்வாகத்திலும், கல்வி அமைப்பிலும், வைத்திய துறையிலும் என பல்வேறு ஆற்றல் மிக்க நேர்மையானவர்களை அவர் இனம் கண்டுகொண்டிருப்பார். அவ்வாறானவர்களை இணைத்துக் கொண்டால் மலையக மக்களுக்கும் அவரது சேவை கிடைக்கும். இதில் நன்நோக்கமே முதன்மையானது. எந்த சிக்கலையும் சவாலையும் எதிர்கொள்ள இறைவன் துணை நிற்பார். குறிப்பிட்ட காலத்துக்குள் இது தொடர்பான முழுமையான வேலைத்திட்டம் உருவாக்கப்பட வேண்டும். முகாம்களில் வாழும் நிலை தொடர்ந்தால் சமூக அமைப்புக்கும் எமது சந்ததியினருக்கும் பாதகமான சூழல் உருவாகி விடும்.இந்நிலையில் இம் மக்களின் நம்பிக்கையினைச் சீர்குலைக்கும் வகையில் அரசியல் வாதிகளோ நவீன ஊடகவியலாளர்களோ செயற்படக் கூடாதென இறைவனை வேண்டிக் கொள்வோம் என தெரிவித்தார்.