டித்வா சூறாவளி காரணமாக மலையகத்திற்கு புகையிரத சேவைகள் பாரிய அளவில் பாதிப்பினை ஏற்படுத்தின இதனால் ஹட்டன் புகையிரத நிலையம் மற்றும் கொட்டகலை, தலவாக்கலை, வட்டகொட,கிரேட் வெஸ்டர்ன்,நானுஓயா,உட ரதல்ல என்பன கடந்த 84 நாட்களாக ஆட்கள் நடமாற்றம் இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றது.
இந்த புகையிரத நிலையத்திற்கு நாளாந்தம் உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட அன்றாடம் புகையிரதத்தினை பயன்படுத்தும் பொது ஆயிரக்ணக்கில் வந்து சென்றனர்.
ஹட்டன் மலையக பகுதி ஊடக கடந்த காலங்களில் நாளொன்றுக்கு 14 புகையிரத சேவைகள் இடம்பெற்றதாகவும் அந்த சேவைகள் இடம்பெறாமையினால் பெருந்தோட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகளும் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அரச ஊழியர்கள் பாரியளவில் பாதிக்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இன்று இந்த புகையிரத சேவை இயங்காமையினால் பலரும் பாதிப்படைந்துள்ளனர்.
சிவனொளிபாதமலை பருவ காலம் தற்போது ஆரம்பித்துள்ள நிலையில் அதிக யாத்திரியர்கள் புகையிரதங்கள் ஊடாக வருவதனால் யாத்திரியர்களின் வருகையும் குறைந்துள்ளது.
இதனால் ஹட்டன் புகையிரத நிலையத்திற்கு நாளொன்றுக்கு சுமார் 3 தொடக்கம் 4 லட்சம் ரூபா வரை நட்டம் ஏற்பட்டுள்ளது.
இந்த காலப்பகுதியில் ஹட்டன் புகையிரத நிலையத்திற்கு மாத்திரம் சுமார் 300 லட்சம் ரூபாவுக்கும் அதிக நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மலையக புகையிரத சேவைகள் முடங்கியுள்ளதனால் பொருட்கள் பறிமாற்ற நடவடிக்கை பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளன.
இதனால் வர்த்தகர்கள் பெரும் நட்டத்தினை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் இலங்கை புகையிரத திணைகளத்திற்கு பாரிய அளவில் நட்டம் ஏற்பட்டுள்ளன.
இந் நிலையில் நாவலபிட்டி வட்டவளை வரை புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது ஆனால் குறித்த புகையிரத சேவை கொட்டகலை வரை செல்வதற்கான வாய்ப்புக்கள் காணப்பட்ட போதிலும் அதனை பொறுப்பு வாய்ந்தவர்கள் முன்னெடுகாதது ஏன் என பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.
இந்த புகையிரத சேவையினை கொட்டகலை வரை நீடிக்குமாறும் பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இந்த மலையகத்திற்கான புகையிரத சேவையினை உடன் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது அனைவரதும் எதிர்ப்பார்ப்பு.
டித்வாவால் 84 நாட்களாக வெறிச்சோடி போயுள்ள மலையக புகையிரத நிலையங்கள் டித்வா சூறாவளி காரணமாக மலையகத்திற்கு புகையிரத சேவைகள் பாரிய அளவில் பாதிப்பினை ஏற்படுத்தின இதனால் ஹட்டன் புகையிரத நிலையம் மற்றும் கொட்டகலை, தலவாக்கலை, வட்டகொட,கிரேட் வெஸ்டர்ன்,நானுஓயா,உட ரதல்ல என்பன கடந்த 84 நாட்களாக ஆட்கள் நடமாற்றம் இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றது.இந்த புகையிரத நிலையத்திற்கு நாளாந்தம் உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட அன்றாடம் புகையிரதத்தினை பயன்படுத்தும் பொது ஆயிரக்ணக்கில் வந்து சென்றனர்.ஹட்டன் மலையக பகுதி ஊடக கடந்த காலங்களில் நாளொன்றுக்கு 14 புகையிரத சேவைகள் இடம்பெற்றதாகவும் அந்த சேவைகள் இடம்பெறாமையினால் பெருந்தோட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகளும் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அரச ஊழியர்கள் பாரியளவில் பாதிக்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இன்று இந்த புகையிரத சேவை இயங்காமையினால் பலரும் பாதிப்படைந்துள்ளனர்.சிவனொளிபாதமலை பருவ காலம் தற்போது ஆரம்பித்துள்ள நிலையில் அதிக யாத்திரியர்கள் புகையிரதங்கள் ஊடாக வருவதனால் யாத்திரியர்களின் வருகையும் குறைந்துள்ளது.இதனால் ஹட்டன் புகையிரத நிலையத்திற்கு நாளொன்றுக்கு சுமார் 3 தொடக்கம் 4 லட்சம் ரூபா வரை நட்டம் ஏற்பட்டுள்ளது. இந்த காலப்பகுதியில் ஹட்டன் புகையிரத நிலையத்திற்கு மாத்திரம் சுமார் 300 லட்சம் ரூபாவுக்கும் அதிக நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.மலையக புகையிரத சேவைகள் முடங்கியுள்ளதனால் பொருட்கள் பறிமாற்ற நடவடிக்கை பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளன.இதனால் வர்த்தகர்கள் பெரும் நட்டத்தினை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதனால் இலங்கை புகையிரத திணைகளத்திற்கு பாரிய அளவில் நட்டம் ஏற்பட்டுள்ளன.இந் நிலையில் நாவலபிட்டி வட்டவளை வரை புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது ஆனால் குறித்த புகையிரத சேவை கொட்டகலை வரை செல்வதற்கான வாய்ப்புக்கள் காணப்பட்ட போதிலும் அதனை பொறுப்பு வாய்ந்தவர்கள் முன்னெடுகாதது ஏன் என பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.இந்த புகையிரத சேவையினை கொட்டகலை வரை நீடிக்குமாறும் பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.இந்த மலையகத்திற்கான புகையிரத சேவையினை உடன் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது அனைவரதும் எதிர்ப்பார்ப்பு.