• Apr 01 2025

நாட்டில் இளைஞர்களிடையே அதிகரிக்கும் HIV தொற்றுகள்...!

Sharmi / Jun 18th 2024, 6:00 pm
image

நாட்டில் 15 முதல் 24 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்களிடையே HIV தொற்றுகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக தேசிய எயிட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் ஆலோசகர் பால்வினை நோய் வைத்தியர் வினோ தர்மகுலசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

HIV தொற்றுகள் மேல் மாகாணத்திலேயே அதிகளவாக பதிவாகியுள்ளது.

அதில் குறிப்பாக ஆண்களிடையே நோய் தொற்று அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, இந்தப் போக்கை எதிர்த்துப் போராடுவதற்கு விரிவான விழிப்புணர்வு பிரச்சாரங்கள் முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான HIV சோதனைகள் நடாத்தப்பட்டுள்ளதுடன், சோதனைத் தளங்களில் கணிசமான எண்ணிக்கையிலான நேர்மறை வழக்குகள் கண்டறியப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் இளைஞர்களிடையே அதிகரிக்கும் HIV தொற்றுகள். நாட்டில் 15 முதல் 24 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்களிடையே HIV தொற்றுகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக தேசிய எயிட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் ஆலோசகர் பால்வினை நோய் வைத்தியர் வினோ தர்மகுலசிங்க தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,HIV தொற்றுகள் மேல் மாகாணத்திலேயே அதிகளவாக பதிவாகியுள்ளது.அதில் குறிப்பாக ஆண்களிடையே நோய் தொற்று அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.எனவே, இந்தப் போக்கை எதிர்த்துப் போராடுவதற்கு விரிவான விழிப்புணர்வு பிரச்சாரங்கள் முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.கடந்த ஆண்டில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான HIV சோதனைகள் நடாத்தப்பட்டுள்ளதுடன், சோதனைத் தளங்களில் கணிசமான எண்ணிக்கையிலான நேர்மறை வழக்குகள் கண்டறியப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement