• Nov 13 2025

20 பேருடன் பயணித்த இராணுவ விமானத்தில் நடந்த பயங்கரம்; கீழே விழுந்து நொறுங்கும்பரபரப்பு காட்சி

Chithra / Nov 12th 2025, 8:09 am
image


அஜர்பைஜான் எல்லைக்கு அருகில் ஜோர்ஜியாவில் இருந்து 20 பேருடன் சென்ற C-130 துருக்கிய இராணுவ விமானம் நேற்றைய தினம் விபத்துக்குள்ளானதாக துருக்கியின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.  

இந்த நிலையில், விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அஜர்பைஜானில் உள்ள இன்சிர்லிக் விமான தளத்திலிருந்து குறித்த விமானம் புறப்பட்டபோது, ​​ஜோர்ஜியாவின் காகசஸ் மலைகளில் விமானம் காணாமல் போனதாக ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அது விபத்துக்குள்ளானமை உறுதி செய்யப்பட்டது.

துருக்கிய தேசிய பாதுகாப்பு அமைச்சகம், விமானத்தில் பணியாளர்கள் உட்பட 20 துருக்கிய இராணுவ வீரர்கள் இருந்ததாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

தற்போது, ​​துருக்கிய இராணுவத்தைச் சேர்ந்த இரண்டு சிறப்பு மீட்புக் குழுக்கள், ஜோர்ஜிய அதிகாரிகளின் உதவியுடன், விபத்து நடந்த இடத்தை அடைந்துள்ள நிலையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

விமானம் கீழே விழுவதும் புகை எழுவதும் வீடியோவில் பதிவாகி உள்ளது.

உயிரிழப்புகள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படாததால், அதிகாரிகள் இன்னும் காத்திருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.  


20 பேருடன் பயணித்த இராணுவ விமானத்தில் நடந்த பயங்கரம்; கீழே விழுந்து நொறுங்கும்பரபரப்பு காட்சி அஜர்பைஜான் எல்லைக்கு அருகில் ஜோர்ஜியாவில் இருந்து 20 பேருடன் சென்ற C-130 துருக்கிய இராணுவ விமானம் நேற்றைய தினம் விபத்துக்குள்ளானதாக துருக்கியின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.  இந்த நிலையில், விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.அஜர்பைஜானில் உள்ள இன்சிர்லிக் விமான தளத்திலிருந்து குறித்த விமானம் புறப்பட்டபோது, ​​ஜோர்ஜியாவின் காகசஸ் மலைகளில் விமானம் காணாமல் போனதாக ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அது விபத்துக்குள்ளானமை உறுதி செய்யப்பட்டது.துருக்கிய தேசிய பாதுகாப்பு அமைச்சகம், விமானத்தில் பணியாளர்கள் உட்பட 20 துருக்கிய இராணுவ வீரர்கள் இருந்ததாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.தற்போது, ​​துருக்கிய இராணுவத்தைச் சேர்ந்த இரண்டு சிறப்பு மீட்புக் குழுக்கள், ஜோர்ஜிய அதிகாரிகளின் உதவியுடன், விபத்து நடந்த இடத்தை அடைந்துள்ள நிலையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. விமானம் கீழே விழுவதும் புகை எழுவதும் வீடியோவில் பதிவாகி உள்ளது.உயிரிழப்புகள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படாததால், அதிகாரிகள் இன்னும் காத்திருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.  

Advertisement

Advertisement

Advertisement