நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துக்கான செயலகத்தின் நிதிப் பங்களிப்பின் மூலம் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட இளைஞர், யுவதிகளுக்கான 100 மணித்தியால சிங்களப் பாடநெறியானது அட்டாளைச்சேனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஏ.சீ. அகமட் அப்கரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் தேசிய ஒருமைப்பாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எம். முஹம்மட் றிஸான் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எம். ஜஃபர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சிறப்பித்ததுடன் பாடநெறியை ஆரம்பித்து வைத்தார்.
சமூகங்களுக்கிடையில் ஒற்றுமை, அரச தனியார் தொழில்வாய்ப்பில் சிறந்த நிர்வாகக் கட்டமைப்பை ஏற்படுத்தல், தேசிய செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்தல், இன ரீதியான முரண்பாட்டைக் களைதல் போன்ற எண்ணக்கருவை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பாடநெறி இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் கணக்காளர் எப்.பர்ஹான், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துக்கான செயலகத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் ஹாசிம் சாலிஹ், கிராம நிர்வாக உத்தியோகத்தர் எம்.எஸ்.ஏ.நியாஸ் மற்றும் சிங்கள மொழி வளவாளர் எம்.எம். பாசில் மற்றும் சிங்கள பாடநெறி பயிலுநர்களும் கலந்துகொண்டனர்.
அட்டாளைச்சேனை இளைஞர், யுவதிகளுக்கான இரண்டாம் மொழி பயிற்சி நெறி ஆரம்ப நிகழ்வு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துக்கான செயலகத்தின் நிதிப் பங்களிப்பின் மூலம் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட இளைஞர், யுவதிகளுக்கான 100 மணித்தியால சிங்களப் பாடநெறியானது அட்டாளைச்சேனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஏ.சீ. அகமட் அப்கரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் தேசிய ஒருமைப்பாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எம். முஹம்மட் றிஸான் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எம். ஜஃபர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சிறப்பித்ததுடன் பாடநெறியை ஆரம்பித்து வைத்தார்.சமூகங்களுக்கிடையில் ஒற்றுமை, அரச தனியார் தொழில்வாய்ப்பில் சிறந்த நிர்வாகக் கட்டமைப்பை ஏற்படுத்தல், தேசிய செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்தல், இன ரீதியான முரண்பாட்டைக் களைதல் போன்ற எண்ணக்கருவை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பாடநெறி இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.இதில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் கணக்காளர் எப்.பர்ஹான், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துக்கான செயலகத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் ஹாசிம் சாலிஹ், கிராம நிர்வாக உத்தியோகத்தர் எம்.எஸ்.ஏ.நியாஸ் மற்றும் சிங்கள மொழி வளவாளர் எம்.எம். பாசில் மற்றும் சிங்கள பாடநெறி பயிலுநர்களும் கலந்துகொண்டனர்.