ஜனாதிபதி எதிர்க்கட்சி உறுப்பினர்களிடம் ஹிட்லர் போன்று கத்துகின்றார். சர்வதேச நாணய நிதியத்திடம் மட்டும் பூனை போல் இருக்கின்றார். ஹிட்லர் அவருடைய சர்வாதிகாரத்தாலே அழிந்தார் என்பதை ஜனாதிபதி நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
பாராளுமன்றில் நேற்று இடம்பெற்ற 2026ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டம் மீதான 3 ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
ஜனாதிபதி அநுரகுமார வரவு செலவு திட்ட உரையின்போது என்னை இங்கு ஹிட்லர் என்றும் சர்வாதிகாரி என்றும் கூறினார்கள். அமெரிக்காவும், ரஷ்யாவும் இணைந்து ஹிட்லரை தோற்கடித்ததுபோல, எதிரணிகள் ஒன்றிணைந்து தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை தோற்படிப்பார்களாம். ஆனால் யார் இங்கு ரஷ்யா?அமெரிக்கா? என்று கேட்டார்.
யார் இங்கு ரஷ்யாவாக இருந்தால் என்ன அமெரிக்காவாக இருந்தால் என்ன அது முக்கியமில்லை. ஹிட்லர் அவருடைய சர்வாதிகாரத்தாலே அழிந்தார் என்பது தான் முக்கியம்.
ஜனாதிபதி எங்களிடம் ஹிட்லர் போன்று கத்துவதை போன்று ஐ.எம்.எப் யிடம் கத்துங்கள் பார்க்கலாம். அங்கு மட்டும் பூனை போல் இருக்கிறீர்கள்.
சர்வதேச நாணய நிதியத்தை விரட்டுவதாக கூறிக்கொண்டே ஜனாதிபதி ஆட்சிக்கு வந்தார். ஆனால் எங்களுக்கு போடும் சத்தத்தை சர்வதேச நாணய நிதியத்திற்கு போடுவதில்லையே.
மக்களுக்கு அநீதியாக வரி அறவிட வேண்டாம். பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என்றும் சர்வதேச நாணய நிதியத்திடம் கூறுங்களேன். அதைக் கூறமாட்டார் என்றார்.
எதிர்க்கட்சியினரிடம் ஹிட்லர்; IMF இடம் பூனை – நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டு ஜனாதிபதி எதிர்க்கட்சி உறுப்பினர்களிடம் ஹிட்லர் போன்று கத்துகின்றார். சர்வதேச நாணய நிதியத்திடம் மட்டும் பூனை போல் இருக்கின்றார். ஹிட்லர் அவருடைய சர்வாதிகாரத்தாலே அழிந்தார் என்பதை ஜனாதிபதி நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.பாராளுமன்றில் நேற்று இடம்பெற்ற 2026ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டம் மீதான 3 ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,ஜனாதிபதி அநுரகுமார வரவு செலவு திட்ட உரையின்போது என்னை இங்கு ஹிட்லர் என்றும் சர்வாதிகாரி என்றும் கூறினார்கள். அமெரிக்காவும், ரஷ்யாவும் இணைந்து ஹிட்லரை தோற்கடித்ததுபோல, எதிரணிகள் ஒன்றிணைந்து தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை தோற்படிப்பார்களாம். ஆனால் யார் இங்கு ரஷ்யாஅமெரிக்கா என்று கேட்டார்.யார் இங்கு ரஷ்யாவாக இருந்தால் என்ன அமெரிக்காவாக இருந்தால் என்ன அது முக்கியமில்லை. ஹிட்லர் அவருடைய சர்வாதிகாரத்தாலே அழிந்தார் என்பது தான் முக்கியம்.ஜனாதிபதி எங்களிடம் ஹிட்லர் போன்று கத்துவதை போன்று ஐ.எம்.எப் யிடம் கத்துங்கள் பார்க்கலாம். அங்கு மட்டும் பூனை போல் இருக்கிறீர்கள். சர்வதேச நாணய நிதியத்தை விரட்டுவதாக கூறிக்கொண்டே ஜனாதிபதி ஆட்சிக்கு வந்தார். ஆனால் எங்களுக்கு போடும் சத்தத்தை சர்வதேச நாணய நிதியத்திற்கு போடுவதில்லையே.மக்களுக்கு அநீதியாக வரி அறவிட வேண்டாம். பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என்றும் சர்வதேச நாணய நிதியத்திடம் கூறுங்களேன். அதைக் கூறமாட்டார் என்றார்.