• Feb 23 2025

பகலில் வெப்பம் இரவில் மழை - மீனவர்களுக்கு எச்சரிக்கை

Thansita / Feb 23rd 2025, 8:51 am
image

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் நாளை  முதல் சில தினங்களுக்கு மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படுமென தெரிவிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படுமென தெரிவிக்கப்ட்டுள்ளது. 

வடக்கு, வடமத்திய, வடமேல், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் சில இடங்களிலும்  காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்றையதினம் அதிகரித்த வெப்பநிலை காணப்படுமென தெரிவிக்கப்ட்டுள்ளது.  

காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் சிறிதளவு மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சீரான வானிலை நிலவக்கூடும்.

மத்திய, சப்ரகமுவ, மேல், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் காலை வேளையில் பனி மூட்டம் காணப்படும்.

நாட்டைச் சூழவுள்ள கடல் பிராந்தியங்களில் சீரான வானிலை காணப்படுவதோடு   மணித்தியாலத்திற்கு  20 - 30 கிலோமீற்றர் வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து காற்று வீசும்.  

நீர்கொழும்பு தொடக்கம் புத்தளம் ஊடாக மன்னார்  வரையான மற்றும்  மாத்தறை தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும் என்பதால் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பகலில் வெப்பம் இரவில் மழை - மீனவர்களுக்கு எச்சரிக்கை வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் நாளை  முதல் சில தினங்களுக்கு மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படுமென தெரிவிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படுமென தெரிவிக்கப்ட்டுள்ளது. வடக்கு, வடமத்திய, வடமேல், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் சில இடங்களிலும்  காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்றையதினம் அதிகரித்த வெப்பநிலை காணப்படுமென தெரிவிக்கப்ட்டுள்ளது.  காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் சிறிதளவு மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சீரான வானிலை நிலவக்கூடும்.மத்திய, சப்ரகமுவ, மேல், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் காலை வேளையில் பனி மூட்டம் காணப்படும்.நாட்டைச் சூழவுள்ள கடல் பிராந்தியங்களில் சீரான வானிலை காணப்படுவதோடு   மணித்தியாலத்திற்கு  20 - 30 கிலோமீற்றர் வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து காற்று வீசும்.  நீர்கொழும்பு தொடக்கம் புத்தளம் ஊடாக மன்னார்  வரையான மற்றும்  மாத்தறை தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும் என்பதால் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement