கேரள மாநிலம் இடுக்கியில் உள்ள ஹோட்டலில் கழிவு நீர் தொட்டியைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம் இடுக்கியில் ஹோட்டல் ஒன்றில் கழிவு நீர் தொட்டியைச் சுத்தம் செய்யும் பணியில் தொழிலாளர்கள் 3 பேர் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது தொழிலாளர்கள் மூவர்களுக்கு மூச்சத்திணறல் ஏற்பட்டது. பின்னர் அவர் மூவரும் உயிரிழந்தனர்.
கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய முதலில் ஒருவர் தொட்டிக்குள் நுழைந்தார்,. ஆனால் அவர் திரும்பி வரவில்லை. இதனால் மற்றவரும் தொட்டிக்குள் சென்றார்.
பின்னர் இருவரையும் மீட்கும் முயற்சியில் மற்றுமொரு நபர் ஈடுபட்டுள்ளார். பின்னர் மூவரும் தொட்டிக்குள் சிக்கிக்கொண்டது தெரியவந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் மற்றும் தீயணைப்புப் படையினர் விரைந்தனர்.
நீண்ட நேரம் போராடி மீட்பு படையினர் மூவரையும் சடலமாகவே தொட்டியில் இருந்து மீட்டனர்.
பின்னர் அவர்களது உடல்கள் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக இடுக்கி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
தகவல் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொட்டியின் உள்ளே ஆக்ஸிஜன் பற்றாக்குறையே இந்த துயரத்திற்குக் காரணம் என்பது விசாரணையில் தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து, விபத்திற்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.
ஹோட்டலில் கழிவுநீர் தொட்டி சுத்திகரிப்பு; மூச்சுத்திணறி மூவர் உயிரிழந்த சோகம் கேரள மாநிலம் இடுக்கியில் உள்ள ஹோட்டலில் கழிவு நீர் தொட்டியைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.கேரள மாநிலம் இடுக்கியில் ஹோட்டல் ஒன்றில் கழிவு நீர் தொட்டியைச் சுத்தம் செய்யும் பணியில் தொழிலாளர்கள் 3 பேர் ஈடுபட்டிருந்தனர். அப்போது தொழிலாளர்கள் மூவர்களுக்கு மூச்சத்திணறல் ஏற்பட்டது. பின்னர் அவர் மூவரும் உயிரிழந்தனர். கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய முதலில் ஒருவர் தொட்டிக்குள் நுழைந்தார்,. ஆனால் அவர் திரும்பி வரவில்லை. இதனால் மற்றவரும் தொட்டிக்குள் சென்றார். பின்னர் இருவரையும் மீட்கும் முயற்சியில் மற்றுமொரு நபர் ஈடுபட்டுள்ளார். பின்னர் மூவரும் தொட்டிக்குள் சிக்கிக்கொண்டது தெரியவந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் மற்றும் தீயணைப்புப் படையினர் விரைந்தனர். நீண்ட நேரம் போராடி மீட்பு படையினர் மூவரையும் சடலமாகவே தொட்டியில் இருந்து மீட்டனர்.பின்னர் அவர்களது உடல்கள் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக இடுக்கி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. தகவல் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொட்டியின் உள்ளே ஆக்ஸிஜன் பற்றாக்குறையே இந்த துயரத்திற்குக் காரணம் என்பது விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து, விபத்திற்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.