• Oct 02 2025

மின்சாரக்கம்பத்துடன் மோதி நொருங்கிய கார் காயமின்றி தப்பிய பயணிகள் மட்டக்களப்பில் சம்பவம்

shanuja / Sep 30th 2025, 4:52 pm
image

கட்டுப்பாட்டையிழந்த கார் வீதியின் அருகிலிருந்த மின்சாரக்கம்பத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. 


இந்த விபத்துச் சம்பவம் மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளை பகுதியில் இன்று பிற்பகல் 12. 30 மணியளவில்  இடம்பெற்றுள்ளது. 


விபத்து தொடர்பில் தெரிய வருவதாவது, 


மட்டக்களப்பு பகுதியிலிருந்து கல்முனை நோக்கி மட்டக்களப்பு -  கல்முனை பிரதான வீதியூடாக பயணித்த கார் ஒன்று வீதியை விட்டு விலகி வீதியோரமிருந்த மின்சாரக் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.


விபத்து நடைபெற்ற போது  காரில் இருவர் பயணித்துள்ள நிலையில் தெய்வாதீனமாக இருவருக்கும் எவ்வித காயம் ஏற்றபடவில்லை. எனினும்  காரின் முன் பகுதி சேதமடைந்துள்ளது.


விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மின்சாரக்கம்பத்துடன் மோதி நொருங்கிய கார் காயமின்றி தப்பிய பயணிகள் மட்டக்களப்பில் சம்பவம் கட்டுப்பாட்டையிழந்த கார் வீதியின் அருகிலிருந்த மின்சாரக்கம்பத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்துச் சம்பவம் மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளை பகுதியில் இன்று பிற்பகல் 12. 30 மணியளவில்  இடம்பெற்றுள்ளது. விபத்து தொடர்பில் தெரிய வருவதாவது, மட்டக்களப்பு பகுதியிலிருந்து கல்முனை நோக்கி மட்டக்களப்பு -  கல்முனை பிரதான வீதியூடாக பயணித்த கார் ஒன்று வீதியை விட்டு விலகி வீதியோரமிருந்த மின்சாரக் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.விபத்து நடைபெற்ற போது  காரில் இருவர் பயணித்துள்ள நிலையில் தெய்வாதீனமாக இருவருக்கும் எவ்வித காயம் ஏற்றபடவில்லை. எனினும்  காரின் முன் பகுதி சேதமடைந்துள்ளது.விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement