• Oct 02 2025

சிறுவர் தினத்தில் 45 மாணவர்களுக்கு நடந்த துயரம்; பாடசாலையில் வழங்கப்பட்ட உணவால் சிக்கல்

Chithra / Oct 1st 2025, 7:26 pm
image

 

பொலன்னறுவை - ஹிங்குரக்கொட, பக்கமுன கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் சுமார் 45 மாணவர்கள் உணவு ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

சிறுவர்கள் தினத்தை முன்னிட்டு அந்த பாடசாலையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த பாடசாலையில் சுமார் 230 மாணவர்கள் கல்வி கற்கும் நிலையில் அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு இந்த உணவு வழங்கப்பட்டுள்ளது. 

நிகழ்ச்சி முடிந்து மாணவர்கள் வீடு திரும்பியதன் பின்னர் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. 

ஒவ்வொரு பெற்றோரும் தங்களது பிள்ளைகளை பக்கமுன பிராந்திய வைத்தியசாலைக்கு அழைத்து சென்றுள்ளனர். 

அவர்களில் பல மாணவர்கள் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதுடன் சிலர் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர். 

சம்பவம் குறித்து பக்கமுன பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


சிறுவர் தினத்தில் 45 மாணவர்களுக்கு நடந்த துயரம்; பாடசாலையில் வழங்கப்பட்ட உணவால் சிக்கல்  பொலன்னறுவை - ஹிங்குரக்கொட, பக்கமுன கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் சுமார் 45 மாணவர்கள் உணவு ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிறுவர்கள் தினத்தை முன்னிட்டு அந்த பாடசாலையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பாடசாலையில் சுமார் 230 மாணவர்கள் கல்வி கற்கும் நிலையில் அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு இந்த உணவு வழங்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சி முடிந்து மாணவர்கள் வீடு திரும்பியதன் பின்னர் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. ஒவ்வொரு பெற்றோரும் தங்களது பிள்ளைகளை பக்கமுன பிராந்திய வைத்தியசாலைக்கு அழைத்து சென்றுள்ளனர். அவர்களில் பல மாணவர்கள் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதுடன் சிலர் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர். சம்பவம் குறித்து பக்கமுன பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement