• Oct 02 2025

தட்டுவன்கொட்டியில் வெடிக்காத கண்ணிவெடிகள் ; அகற்றும் பணியை மீளவும் முன்னெடுக்குமாறு கோரிக்கை!

shanuja / Oct 1st 2025, 4:24 pm
image

கிளிநொச்சி மாவட்டத்தின் தட்டுவன்கொட்டியின் சில பகுதிகளில் தற்போதும் வெடிக்காத நிலையில் கண்ணிவெடிகள் இனங்கானப்பட்டுள்ளன. எனவே அவற்றை அகற்ற மீளவும் பணியை முன்னெடுக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


இது தொடர்பில் அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், 


எமது பகுதியில் 120 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். எந்த ஒரு  அவசர தேவை கருதியும் செல்வதாயின் போக்குவரத்து வசதிகள் இல்லாத காரணத்தால்  தனியார் வாகனங்களிலே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 


வைத்தியசாலை செல்வதற்கு நோயாளர் காவு வண்டிகளே வந்து எம்மை வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்கின்றது. 


 எமது பகுதியில் இருவர் சட்ட விரோதமான முறையில் வெடிக்காத நிலையில் இருந்த வெடி பொருளை வெட்ட முயன்றதன் காரணமாக வெடித்து படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 


அன்றைய தினமே வெடிக்காத நிலையில் இரண்டு எரிகனைகள் இனங்காணப்பட்டு  பொலிஸாரிடம்

ஒப்படைக்கப்பட்டுள்ளது. 


இதன் காரணமாக  எமது பகுதிகளில் இருப்பவர்கள் பெரும் அச்ச நிலைமையுடன் வாழ்ந்து வருகின்றனர். 


எனவே இதற்கு உரிய தீர்வினை பெற்று தரும் வகையில் விரைவாக எமது பகுதியில் மீளவும் ஒரு முறை மனிதநேய கண்ணிவெடி பிரிவினர்  கண்ணிவெடியை  அகற்றுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

தட்டுவன்கொட்டியில் வெடிக்காத கண்ணிவெடிகள் ; அகற்றும் பணியை மீளவும் முன்னெடுக்குமாறு கோரிக்கை கிளிநொச்சி மாவட்டத்தின் தட்டுவன்கொட்டியின் சில பகுதிகளில் தற்போதும் வெடிக்காத நிலையில் கண்ணிவெடிகள் இனங்கானப்பட்டுள்ளன. எனவே அவற்றை அகற்ற மீளவும் பணியை முன்னெடுக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பில் அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், எமது பகுதியில் 120 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். எந்த ஒரு  அவசர தேவை கருதியும் செல்வதாயின் போக்குவரத்து வசதிகள் இல்லாத காரணத்தால்  தனியார் வாகனங்களிலே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வைத்தியசாலை செல்வதற்கு நோயாளர் காவு வண்டிகளே வந்து எம்மை வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்கின்றது.  எமது பகுதியில் இருவர் சட்ட விரோதமான முறையில் வெடிக்காத நிலையில் இருந்த வெடி பொருளை வெட்ட முயன்றதன் காரணமாக வெடித்து படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அன்றைய தினமே வெடிக்காத நிலையில் இரண்டு எரிகனைகள் இனங்காணப்பட்டு  பொலிஸாரிடம்ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக  எமது பகுதிகளில் இருப்பவர்கள் பெரும் அச்ச நிலைமையுடன் வாழ்ந்து வருகின்றனர். எனவே இதற்கு உரிய தீர்வினை பெற்று தரும் வகையில் விரைவாக எமது பகுதியில் மீளவும் ஒரு முறை மனிதநேய கண்ணிவெடி பிரிவினர்  கண்ணிவெடியை  அகற்றுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement