• Oct 02 2025

முகமாலை பகுதியில் வெடிக்காத நிலையில் வெடி குண்டுகள் கண்டுபிடிப்பு!

Chithra / Oct 1st 2025, 6:31 pm
image

 

 

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முகமாலை வடக்கு பகுதியில் இன்றையதினம் பிற்பகல் வெடிக்காத நிலையில் 31 குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

சம்பவம்  தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

முகமாலை வடக்கு பகுதியில் வீட்டு உரிமையாளர் ஒருவர் தமது வீட்டில் பள்ளம் தோண்டியுள்ளார். 

இதன்போது அப் பிரதேசத்தில் ஆபத்தான குண்டுகள் காணப்பட்டுள்ளன. 

இதனையடுத்து வீட்டு உரிமையாளர் உடனடியாக பளை பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

அதன் பின்னர் கிளிநொச்சி நீதி மன்றத்தின் உத்தரவுடன் பாதுகாப்பான முறையில் வெடி குண்டுகளை மீட்கும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .

முகமாலை பகுதியில் வெடிக்காத நிலையில் வெடி குண்டுகள் கண்டுபிடிப்பு   கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முகமாலை வடக்கு பகுதியில் இன்றையதினம் பிற்பகல் வெடிக்காத நிலையில் 31 குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.சம்பவம்  தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,முகமாலை வடக்கு பகுதியில் வீட்டு உரிமையாளர் ஒருவர் தமது வீட்டில் பள்ளம் தோண்டியுள்ளார். இதன்போது அப் பிரதேசத்தில் ஆபத்தான குண்டுகள் காணப்பட்டுள்ளன. இதனையடுத்து வீட்டு உரிமையாளர் உடனடியாக பளை பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.அதன் பின்னர் கிளிநொச்சி நீதி மன்றத்தின் உத்தரவுடன் பாதுகாப்பான முறையில் வெடி குண்டுகளை மீட்கும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .

Advertisement

Advertisement

Advertisement