• Oct 02 2025

ஆசிரியர்களின் பாண்ட் இசை முழங்க அழைத்துவரப்பட்ட மாணவர்கள்; முன்னுதாரணமாக திகழ்ந்த ஆசான்கள்..!

Chithra / Oct 2nd 2025, 7:56 am
image


முல்லைத்தீவு சிலாவத்தை தமிழ் வித்தியாலயத்தில் சிறுவர் தின விழா நேற்று வெகு விமர்சையாக இடம்பெற்றது.

பாடசாலையின் முதல்வர்  சிறிலதாவின்   வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்ற இவ்விழாவில், மாணவர்கள், ஆசிரியர்கள் உற்சாகமாக கலந்து கொண்டிருந்தனர்.

சிலாவத்தை சந்தியில் இருந்து பாடசாலை வளாகம் வரை  ஆசிரியர்களின் பாண்ட் வாத்தியத்தியத்துடன் மாணவர்கள் பாடசாலைக்கு  அணிவகுத்து அழைத்து வரப்பட்டனர்.

பின்னர் நடைபெற்ற சிறப்புரைகள், கலாசார நிகழ்ச்சிகள் மற்றும் மாணவர்களின் பல்வேறு கலைப்பாடல்கள், பாடசாலையின் பெயருடன் சிறுவர் தினம் பொறிக்கப்பட்ட அடையாள சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை சிறுவர் தின கொண்டாட்டத்தை மேலும் சிறப்பித்தன.


இதேவேளை சிறுவர் தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணம் அச்சுவேலி மத்திய கல்லூரியில் ஆசிரியர்களின் பாண்ட் அணிவகுப்பு மரியாதையுடன் மாணவர்கள் அழைத்துவரப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. 


ஆசிரியர்களின் பாண்ட் இசை முழங்க அழைத்துவரப்பட்ட மாணவர்கள்; முன்னுதாரணமாக திகழ்ந்த ஆசான்கள். முல்லைத்தீவு சிலாவத்தை தமிழ் வித்தியாலயத்தில் சிறுவர் தின விழா நேற்று வெகு விமர்சையாக இடம்பெற்றது.பாடசாலையின் முதல்வர்  சிறிலதாவின்   வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்ற இவ்விழாவில், மாணவர்கள், ஆசிரியர்கள் உற்சாகமாக கலந்து கொண்டிருந்தனர்.சிலாவத்தை சந்தியில் இருந்து பாடசாலை வளாகம் வரை  ஆசிரியர்களின் பாண்ட் வாத்தியத்தியத்துடன் மாணவர்கள் பாடசாலைக்கு  அணிவகுத்து அழைத்து வரப்பட்டனர்.பின்னர் நடைபெற்ற சிறப்புரைகள், கலாசார நிகழ்ச்சிகள் மற்றும் மாணவர்களின் பல்வேறு கலைப்பாடல்கள், பாடசாலையின் பெயருடன் சிறுவர் தினம் பொறிக்கப்பட்ட அடையாள சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை சிறுவர் தின கொண்டாட்டத்தை மேலும் சிறப்பித்தன.இதேவேளை சிறுவர் தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணம் அச்சுவேலி மத்திய கல்லூரியில் ஆசிரியர்களின் பாண்ட் அணிவகுப்பு மரியாதையுடன் மாணவர்கள் அழைத்துவரப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement