• Oct 02 2025

இணுவில் பொது நூலக சிறுவர் திறன் விருத்தி மைய மாணவர்களின் சிறுவர் தின விழா

Chithra / Oct 2nd 2025, 8:09 am
image


இணுவில் பொது நூலக சிறுவர் திறன் விருத்தி மைய மாணவர்களின் சிறுவர் தினமும் வாணி விழாவும் நேற்று காலை 7.30 மணியளவில் அதிபர் கமலராணி கிருஸ்ணபிள்ளை தலமையில் ஆரம்பமானது.

நிகழ்விற்கு சிறப்பு அதிதியாக இணுவில் பொது நூலக லண்டன் அமைப்புக்குழு அமைப்பாளர் இ. சிவகுமார்  கலந்து சிறப்பித்ததோடு, மங்கள விளக்கேற்றலைத் தொடர்ந்து மாணவர்களின் தேவாரம் இசைக்கப்பட்டு ஆசிரியர் மாதினி அரங்கன் வரவேற்புரையுடன்  நிகழ்வு ஆரம்பமானது.

சிறுவர் தின சிறப்பு உரைகளை இணுவில் பொது நூலக போசகர்களான பேராசிரியர் தேவராஜா, ஆசிரியர் இரா.அருட்செல்வமும் நிகழ்த்தியதை தொடர்ந்து அதிபர் உரை இடம்பெற்றது.

தொடர்ந்து சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறுவர்களுக்கு இலங்கை வங்கி சுன்னாகம் கிளை, HNB அசூரன்ஸ் நல்லூர் கிளை உத்தியோகத்தர்களுடன் போசகர்கள், அதிபர், ஆசிரியர்கள்  பரிசுப் பொருட்களை வழங்கி வைத்தனர்.

மேலும் சிறுவர்களின் பேச்சு, பாடல்கள், மற்றும் கலை நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றன.


இணுவில் பொது நூலக சிறுவர் திறன் விருத்தி மைய மாணவர்களின் சிறுவர் தின விழா இணுவில் பொது நூலக சிறுவர் திறன் விருத்தி மைய மாணவர்களின் சிறுவர் தினமும் வாணி விழாவும் நேற்று காலை 7.30 மணியளவில் அதிபர் கமலராணி கிருஸ்ணபிள்ளை தலமையில் ஆரம்பமானது.நிகழ்விற்கு சிறப்பு அதிதியாக இணுவில் பொது நூலக லண்டன் அமைப்புக்குழு அமைப்பாளர் இ. சிவகுமார்  கலந்து சிறப்பித்ததோடு, மங்கள விளக்கேற்றலைத் தொடர்ந்து மாணவர்களின் தேவாரம் இசைக்கப்பட்டு ஆசிரியர் மாதினி அரங்கன் வரவேற்புரையுடன்  நிகழ்வு ஆரம்பமானது.சிறுவர் தின சிறப்பு உரைகளை இணுவில் பொது நூலக போசகர்களான பேராசிரியர் தேவராஜா, ஆசிரியர் இரா.அருட்செல்வமும் நிகழ்த்தியதை தொடர்ந்து அதிபர் உரை இடம்பெற்றது.தொடர்ந்து சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறுவர்களுக்கு இலங்கை வங்கி சுன்னாகம் கிளை, HNB அசூரன்ஸ் நல்லூர் கிளை உத்தியோகத்தர்களுடன் போசகர்கள், அதிபர், ஆசிரியர்கள்  பரிசுப் பொருட்களை வழங்கி வைத்தனர்.மேலும் சிறுவர்களின் பேச்சு, பாடல்கள், மற்றும் கலை நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றன.

Advertisement

Advertisement

Advertisement