• Oct 02 2025

அரசுக்கு எதிராக செயற்படும் நுவரெலியா ஆணையாளர்; இடமாற்றக் கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்!

shanuja / Sep 30th 2025, 4:30 pm
image


நுவரெலியா மாவட்ட ஆணையாளர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நுவரெலியாவில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 


நுவரெலியா நகரில் உள்ள சுமார் அறுபதுக்கும் மேற்பட்ட அங்காடி வியாபாரிகள்  இன்று காலை 11 மணி முதல் 12.30 மணி வரை  ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். 


போராட்டகாரர்கள் தற்போது உள்ள அரசாங்கத்தின் பணிப்புரை களை தற்போது உள்ள நுவரெலியா மாவட்ட ஆணையாளர் கணக்கெடுப்பது இல்லை.  அரசுக்கு எதிராக செயற்பட்டு வருகிறார். அதன் காரணமாக நகரில் எந்த ஒரு அபிவிருத்தியும் இல்லை.


இன்றைய அரசு நுவரெலியா நகருக்கு பாரிய அபிவிருத்தி செய்ய முன் வந்த போதும் தற்போது உள்ள ஆணையாளர் செய்ய மறுத்து வருகிறார்.  அவரை உடனடியாக நுவரெலியா மாவட்டத்தில் இருந்து இடமாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை முன்வைத்து  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசுக்கு எதிராக செயற்படும் நுவரெலியா ஆணையாளர்; இடமாற்றக் கோரி மக்கள் ஆர்ப்பாட்டம் நுவரெலியா மாவட்ட ஆணையாளர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நுவரெலியாவில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நுவரெலியா நகரில் உள்ள சுமார் அறுபதுக்கும் மேற்பட்ட அங்காடி வியாபாரிகள்  இன்று காலை 11 மணி முதல் 12.30 மணி வரை  ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். போராட்டகாரர்கள் தற்போது உள்ள அரசாங்கத்தின் பணிப்புரை களை தற்போது உள்ள நுவரெலியா மாவட்ட ஆணையாளர் கணக்கெடுப்பது இல்லை.  அரசுக்கு எதிராக செயற்பட்டு வருகிறார். அதன் காரணமாக நகரில் எந்த ஒரு அபிவிருத்தியும் இல்லை.இன்றைய அரசு நுவரெலியா நகருக்கு பாரிய அபிவிருத்தி செய்ய முன் வந்த போதும் தற்போது உள்ள ஆணையாளர் செய்ய மறுத்து வருகிறார்.  அவரை உடனடியாக நுவரெலியா மாவட்டத்தில் இருந்து இடமாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை முன்வைத்து  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

Advertisement

Advertisement