• Nov 23 2024

யாழில் வீடு புகுந்து திருட்டு- சந்தேக நபருக்கு விளக்கமறியலில்..!

Sharmi / Nov 8th 2024, 11:34 am
image

வட்டுக்கோட்டையில் இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பில் கைதான சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செம்பாட்டம் தோட்டம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து கடந்த இரு தினங்களுக்கு முன்னர் ஒரு தொகை பணம் மற்றும் ஒரு அலைபேசி என்பன களவாடப்பட்டிருந்தன.

இது குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. 

இந்நிலையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் அதே பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவரை கைது செய்ததுடன் களவாடப்பட்ட அலைபேசி மற்றும் ஒரு தொகை பணம் என்பவற்றை மீட்டனர்.

இந்நிலையில் அவரை நேற்றையதினம்(07) மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை, அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

யாழில் வீடு புகுந்து திருட்டு- சந்தேக நபருக்கு விளக்கமறியலில். வட்டுக்கோட்டையில் இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பில் கைதான சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செம்பாட்டம் தோட்டம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து கடந்த இரு தினங்களுக்கு முன்னர் ஒரு தொகை பணம் மற்றும் ஒரு அலைபேசி என்பன களவாடப்பட்டிருந்தன.இது குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் அதே பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவரை கைது செய்ததுடன் களவாடப்பட்ட அலைபேசி மற்றும் ஒரு தொகை பணம் என்பவற்றை மீட்டனர்.இந்நிலையில் அவரை நேற்றையதினம்(07) மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை, அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement